பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ்க்கடல் ராயசொ சில' என்று மணிவாசகரின் தழ்வு நடையில் நாயேன' என்று பணிவுகாட்டிப் பேசுவர். தெய்வப் பாடல்களையும் பாசுரங்களையும் பாடிப் பாடிப் பக்தி இலக்கியத்தின் எல்லை கண்டது தமிழ். ஆதலின் எத்தெய்வத்தை யார் பாடினாலும் பழம் பாடல் அமைப்பின் படிவமாகத்தான் இருக்கமுடியும் என்பது ஒர் உண்மை. போரார் திறம் பாடிப் பொன்னுரசல் ஆடாமோ?" என்பது திருவாசகத்தடம்" ப்ரதர் முடிமணிக் காந்தியடிகட்குப் பல்லாண்டு கூறுதுமே”-------- என்பது சேந்தனார் புெரியாழ்வார் என்பவர்களின் திருப் பல்லாண்டுச் சாயல். 'காந்தி திருமுன் குவியாக் கையென்ன கையே" என்பது சிலப்பதிகார நெறி' 'எக்குறியும் திருநெற்றி இடாதான் கண்டாய் ஏர்வாடாக் கோவிலுறை எம்மான்தானே' 'பொன்னாருந் திருமேனிக்கு பொலிந்து தோன்றும்', ‘பூவிலுயர் சபர்மதி.எம் புனிதனார்க்கே என்பன திருத்தாண்டக வழி' இவ்வாறு அடிகள் இராய.சொ. புதிய காந்திக் கடவுளை பண்டையோர் புனைந்த தெய்வத் தலைப்புகளில் நெக்கு நெக்குருகிப் போற்றுவர். பழைமையான தடத்தைப் பின்பற்றினாலும் கவிதையின் உணர்ச்சிகளும் கொள்கைகளும் புதியனவே. 25. க.பி.த செங்கீரைப் பருவம் - 5 26. திருவர். கண்டபத்து - 45; குழைத்த பத்து - 8 27. காந்தி திருப்பொன்னூசல் - 6 28. திருவா. திருப் பொன்னூசல் காண்க. 29. காந்தி திருப்பல்லாண்டு - எல்லா ஈற்றடிகளும். 30. பெரியாழ் திருப்பல்லாண்டு, (முதலாயிரம் சேந்தனார் திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை). 31. அங்கங்களின் பயன் - 7 - 32. சிலப், ஆய்ச்சியர் குரவை (முன்னிலைப் பரவல்) 33. ஏர்வாடாக் கோவில் - 5 34. சபர்மதி - 2 35. அப்பர் தேவாரம் - ஆறாம் திருமுறை