பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் : 141 மரபான முறையில் தரமான நடையில் காந்தியின் புரட்சி யங்களைப் போற்றிப் புது மெருகு ஊட்டியுள்ளார். தெய்வப் பாசுரமாயினும் கைம்மையை உடைத்திடுவேன்' என் மாதர் மறுமணம் கமழ்கின்றது. எங்கனம் பெண்மை இழிவாகும்’ எனச் சமுதாயத் திருத்தம் வளியுறுத்தப் பெறுகின்றது; இந்தியா எழுந்து விட்டது என நாட்டுப்பற்று எழுப்பப் பெறுகின்றது; வையகத்தில் எல்லோரும் பசியாமல் உண்டு உடுத்தி வாழவேண்டும் எனப் பொது வாழ்வியம் வேண்டப் பெறுகின்றது; எனக்குத் தமிழ் வராது என உரைப்பவர்தம் மனநிலை பழிக்கப்பெறு கின்றது. இவை யாவும் காந்தியப்பாடலின் புதுக்கூறுகள். காந்தி மக்கள் தலைவராதலின், பொது மக்களின் நலவாழ்வுக்கு வேண்டிய மக்களியம் காந்திக் கவிதை முழுவதும் இயங்கக் காண முடிகின்றது. சிறியதொரு கத்தர்பை பக்கம் தோன்றும் ! தினம்படிக்கும் ஒருகீதை அதனுள் தோன்றும் ! மறைஎழுதும் ஒருசிறிய குச்சி தோன்றும் ! வனப்புயர்ந்த இராட்டொன்று திருமுன் தோன்றும் ! கறைஎதுவும் இல்லாத கத்தர் மாலைக் கயிற்றுடனே கடிகாரம் ஒன்று தோன்றும் ! பொறிஅடக்கி ஆண்டபெரும் தகைமை தோன்றும்! பூவில்உயர் சபர்மதினம் புனித னார்க்கே’ இத்திருத்தாண்டகப் பாடலில் தெய்வக் காந்தியின் திருவுருவத் தோற்றம் புனையப்பட்டு புதுக்கருத்துகளும் காலப் புதுச்சொற்களும் தொக்குக் கிடக்கும் அருமைப் பாட்டைக் கண்டு மகிழ்கின்றோம். பாவில் இடம் பெறும் கதர் சைவப் பாடல்களில் திருநீறும், வைணவப் பாசுரங்களில் திருமண்ணும் இடம் பெறுதல்போல, காந்திக் கவிதையில் கதர் நல்லிடம் 36. சபர்மதி - 9