பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ்க்கடல் ராயசொ பெறுகின்றது. காந்தி மதத்திற்குக் கதர் புறச்சின்னம். கதர் என்பது முரட்டுத் துணி. அதனை மென் திருத்தித் தலைவி உடுத்துகின்றாள் என்னும்போது பெண்ணிலக்கியப் போக்கு மாறாமல் இருக்க முடியாதல்லவா? அனிச்சப் பூவையும் சூட்டமாட்டாத மெல்லிய இடையினள் வள்ளுவர் காட்டும் தலைவி. அத்தகைய மெல்லிடைப் பெண் கதர் பெறுகின்றாள். அதன் மேலும் வண்டுகள் தலைமேல் இருந்தால் இடை என்னாகும் என்று வினவுகின்றான் தலைவன். கதர் உடுத்தியே கைராட்டை உருட்டும் காரிகையீர்” என்று காதலன் காரிகையைக் "கலைமான் இப்பக்கம் சென்றதோ?” என்று வினவு கின்றான். தரித்தாள் முரட்டுத் துணிக்கதரை" என்று உடன் போகிய மகளுக்கு நற்றாய் இரங்குகின்றாள். நாடு செழித்திட நண்ணும் முரட்டுக் கதர்சுமந்து வாடிய சிற்றிடை நொந்து" என்பதனால் கதரால் இடைவாடினாலும் நாடு செழிக்கும் என்ற கருத்து புலனாகின்றது. தனிக் கதர் தாங்கும் அழகினன்" என்று தலைவனும் காந்தி மதத்தவன் என்று காட்டுவதற்குக் கதர் அணிகின்றான். தமிழே பயின்று கதரே சுமந்து தளரும் இடை" என்பதில் இடைத்தளர்ச் சிக்கு முரட்டுத்துணி அணிதல் பொருத்தமாகின்றது. ஆனால் தமிழ் பயில்தல் இடைத் தளர்ச்சிக்கு எப்படிக் காரணமாகும்? காந்தித் தலைவி நடந்து தமிழ் நூலை ஏந்திப் படிப்பவள். ஆதலின் தமிழும் அவள் நுசுப்புத் தளர்ச்சிக்குக் காரணமாயிற்று. தமிழ்ப்படிப்பு மெலிவு தரும் 37. காந்தி அந்தாதி - வண்டோச்சி மருங்கு அணைதல் - 51 38. மேலது - கலைமான் வினாதல் - 13 39. மேலது - நற்றாய் இரங்கல் - 41 40. மேலது - வண்டோச்சி மருங் கணைதல். 41. காந்தி அந்தாதி - மனத்திற்குக் கட்டளை - 15 42. மேலது - தோழி தூது உரைத்தல் - 49