பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 143 என்பதனை 'தமிழின் துறைவாய் நுழைந்தனையோ?" என்ற திருக்கோவையார் வினாவால் உயத்துணரலாம். எடுத்துக்காட்டு நடை: பல்வேறு இலக்கியக் கூறுகளுள் ஒன்று எடுத்துக்காட்டு நடையாகும். இந்நடையால் ஏற்றமும் இறக்கமும், வாழ்வும் தாழ்வும் , பெருமையும் சிறுமையும், வன்மையும் மென்மையும், தெள்ளிதின் புலனாகும். "கீழ்த்திசைவாயில் கணவனொடு பெயர்ந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென” என்று சிலம்புச் செல்வி முன்னை நிலையைப் பின்னை நிலையொடு இணைத்துக் காட்டும்போது அவலச் சுவை பொள்ளெனப் பிறக்கின்றது. உணர்ச்சி கிளர்ந்தெழ வேண்டுமெனின், பாடலில் இருநிலை அல்லது பன்னிலை அமைதல் வேண்டும். ஒருநிலைப்பாடல் தன்மைகாட்டுமேயன்றி உணர்ச்சி யின் கொடுமுடி காட்டாது. மெத்தையின் கண்வளர்ந்த மேலோர் எல்லாம் மிதிப்பதற்கும் தகுதி இல்லாக் கயிற்றுப் பாயில்! கைத்தலைக்கு வைத்துறங்கும் காட்சி ஒன்று கனவினிலும் காண்பதுவோ காந்தி வள்ளால் ! (2) கட்டிலின்மேல், பூஅணையில், தென்றல் உண்டு; கவின்உயர்ந்த மாளிகையில் துயின்றோர் எல்லாம் எட்டடிகொள் சிற்றறையில் பூட்டப் பட்டே இருள்கிடத்தல் நிலைத்துண்டோ ஏந்தால் காந்தி ! (3) புத்துருக்கு நெய்அன்றி வேறு காணாப் பொருவுஅரிய பெருவாழ்க்கை பூண்டோர்! எல்லாம் கைத்துணை,எண் ணெயும் அறியா மிடிகூர் வாழ்வைக் கடனாகக் கருதிடுதல் தரையில் உண்டோ ? (4) 43. திருக்கோவை - 20 பாங்கன் வினாதல்)