பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ்க்கடல் ராயசொ எண்சீர் விருத்தத்தில் அமைந்த 'சிறைவாழ்வு'ப் பாடல்கள் யாவும் இருநிலைப் பாடல்களாகும்; அவல உணர்ச்சி கிளர்ந்தெழும் பாடல்களாகும். இவ்விடத்தில் குலசேகரப் பெருமாளின் பாடல் ஒன்று நம்மனத்தில் குமிழியிடுகின்றது. மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ ? காகுத்தர ! கரிய கோவே' என்ற பாசுரப் பகுதி கல்நெஞ்சத்தையும் உருக்குவதை அறிகின்றோம். இலக்கியநயம்: பலவித இலக்கிய நயங்களுள் அறிவு இனிக்குமாறு சொல்வது பொருள் நயமாகும். இதனால் புலவரின் சிந்தனையையும் புரிந்து கொள்ள முடிகின்றது. இம்மை மறுமை என்ற பிறப்புக் கொள்கைகள் பல சிந்தனையைப் புலவர்களிடம் துரண்டியுள்ளன. இம்மைப் பிறப்பிறப்பில்' என்று தலைவன் ஆறுதல் மொழிந்தபோது, அப்படியானால் மறுபிறப்பில் பிரிவான் போலும் என்று தலைவி கலங்கினதாகப் பொய்யில் புலவர் கூறுவர்." எந்திரபீ ரங்கி எங்கள் உணர்ச்சிதன்னை என்செய்யும் ? - உடல் வெந்து போயின் வேற்றுடலில் வீறுகொள்வது உறுதியால்" என்பர் இராய.சொ. உடலைக் கொல்லலாம். விடுதலை உணர்வுக்குக் கொல்லி இல்லை. ஆசையுடையவர்கட்கு 44. பெருமாள் திரும்மொழி - 11. தசரதன் புலம்பால் - பாசுரம் (3) 45. குறள் - 1315 46. விடுதலை - 10