பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ்க்கடல் ராயசொ கொண்டதை நினையாமலே அந்த இறைவனுக்கும் பூசனை புரியும் பட்டர் தீட்டைப் பற்றிப் பேசுகின்றார். இலக்கிய உலகில் சொல்ந்யம், பொருள்நயம் சான்ற பாடல்களையே கவிநயம் உடையனவாக கருதுவார்கள். இவை இல்லாத கவிதைகள், டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அவர்களின் மொழியில் சொன்னால், "பட்டையடிக்கும் எழுதுகோலை யொக்கும்; மழுங்கற் பாடல்களாகக் காட்சி யளிக்கும்." - வேர்மாளத் தீண்டாமை வேண்டியவாறு ! உழைத்தருளி ஏர்வாடாச் சிறையிருந்த எம்மானும் நீதானோ' என்ற தாலாட்டில் தீண்டாமை என்ற மரத்தின் இலை, தழை, கிளைகளை வெட்டினால் போதா; என்றும் தளிராதபடி வேரும் மாளவேண்டும் என்று அழுத்தமாக அறைவர். இக்கருத்தினையே, தீண்டா மைஎனும் தீமை நிலத்தில் சிறிதும் இடனின்றிச் சென்று ஓடி, மாண்டு மடிந்துமண் ணாடித் தொலைந்திட மங்கைய ரே நனி கும்.மியடி’ என்ற கும்மியிலும் வற்புறுத்துவர். காந்தியடிகள் ஒராடை ஆண்டி இந்திய மக்களின் சராசரி ஏழை யொருவனை நினைவுறுத்தப் புனைந்து கொண்ட கோலம். வெள்ளைக்காரன் இவரை Halt-naked fakir என்று கிண்டல் செய்வான். இவர்தம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயரோ ஆடை பல அணியும் நாகரிகர் ஆயினும், ஒராடையுடனே இலண்டன் மாநகர் சென்று அரசரையும் அந்நாட்டு மக்களையும் கண்டு இந்திய உரிமையை எடுத்து இயம்பிய பெருமை உண்டு காந்தி யண்ணலுக்கு. - - 50. தாலாட்டு - 44 51. கும்மி - 42