பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் ( 147 ஒன்னார்கள் கண்டஞ்சும் ஒற்றைக் கத்தர் உடுத்துஆடை பலகமக்கும் ஒரார் காட்டும் எல்நாட்டி மீண்டபெரும் எழிலோன்’ காந்தியடிகள் உடுத்திய ஒரு சிறிய கதராடை பகைவர்க்குப் படையாய்த் தோன்றியது. அழகு என்பது ஆடை மென்மையிலும் எண்ணிக்கையிலும் இல்லை என்பதனை 'எழிலோன் என்ற சொல்லால் குறிப்பிடுவர் தமிழ்க் கடலார். இராய.சொவின் பாடல்கள்: பாடல்களைப் படிப்போரிடம் உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் எழுப்ப வேண்டுமானால் அலங்கார நடைப் பாடல்கள் போதா. பாடல்களில் வெள்ளம் நிகர்க்கும் வேகம் வேண்டும். துள்ளு நடை வேண்டும். சொல்லிலும் சொற்றொடரிலும் சொல் முறையிலும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் அமைய வேண்டும்; அவை நெளியும் பாங்கில் அமைந்து புது வேகத்தில் பாய வேண்டும், கருத்தில் ஆழம் மட்டும் போதாது; சுழிப்பாடும் வேண்டும். செவிச்சுவை அறியர் வாய்ச்சுவை மாக்கள் அவிந்தாலென்ன? அவிதலினின்றும் தப்பிப் பிழைத்து வாழ்ந்தலென்ன? என்று வள்ளுவப் பெருமான் வேகப்படுதல்போல் வேகப்படல் வேண்டும். பாரதிதாசனின் உதாரன் (புரட்சிக்கவி) பேச்சுபோல் அமைதல் வேண்டும். வேகமில்லாத கவிதைகள் இலக்கியப் பாகம் இல்லாதவை. காந்திக் கவிதையில் காட்டாறு போன்ற வேகத்தைக் காண முடிகின்றது. காந்திப் பெருமானைக் கொன்ற கொடுசேய் கோட்சே ஊழிக்காலம் முழுவதும் நரகம் அடைவான் என்று சிலர் சொல்வது இராய.சொ.வின் செவியில் படுகின்றது. சின உணர்வும் அவல உணர்வும் இணைந்து செயற்படுகின்றன புலவர் பெருமானிடம். 52. ஏர்வாடாக் கோயில் - 9. காந்தியடிகளின் ஒராடை இலண்டன் மாநகரிலுல்ள பக்கிங்காம் அரண்மனையையும் அசைத்து ஆட்டிவிடும் என்று சொல்வதுண்டு.