பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டுப் பயணம்: 1930ஆம் ஆண்டு மலேயாவில் சுற்றுப் பயணமும், 1935, 1935ஆம் ஆண்டுகளில் தமது மனைவி உமையாள் ஆச்சியுடன் பர்மா, மலேயா, சிலோன், சுமத்திரா, இந்தோசைனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணமும் செய்துள்ளார். அப்போதெல்லாம் தமிழ் பரப்பும் நற்றொண்டையும் விடாது செய்து வந்துள்ளார். 1961இல் மீண்டும் பர்மா சென்று, இருபது நாட்கள் தங்கி இலக்கியப் பணிபுரித்தார். 1953ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கவும், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றவும் அழைக்கப்பட்டு, மலேயா சென்றார். 24 நாட்கள் ஓய்வு ஒழிவின்றி அந்நாடு முழுவதும் சுற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். பட்டங்கள்: 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தார் தமது அருமைத் தலைவர், இராய.சொ. அவர்களின் மணி விழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். அவ்வமயம் இராய சொ. அவர்களின் ஆழ்ந்தகன்ற தமிழறிவையும், தொண்டினையும் பாராட்டு முகத்தான் அவர்கட்குப் பொன்னாடை போர்த்தி, தமிழ்க்கடல் என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தனர். 196, சனவரியில் பர்மா சென்றிருந்த போது, இரங்கூன்

شيني نہ مہx

நாட்டுக்கோட்டைச் செட்டியார் தர்ம பரிபாலன சபையார் இராய சொ. அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, 'சிவமணி என்ற பட்டமும் சூட்டினார்கள். 1963 ஏப்ரலில் கோலாலம்பூரில் அருள் நெறித் திருக்கூட்டத்தார் இராய.சொ. அவர்களின் சைவ சமய ஈடுபாட்டையும், தொண்டையும் சிறப்பிக்கும் வகையில் 'சிவம் பெருக்கும் சீலர் என்ற பட்டமளித்துப் பேருவகை கொண்டனர். கோயம்புத்துர், ஈரோடு, பவானி முதலிய இடங்களிலுள்ள மெய்யன்பர்கள் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்துள்ளார்கள்.