பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 0 149 'எந்நாட்கண்ணியில் இந்த உணர்ச்சி பீறிட்டுப் பாய்கின்றது.” பித்துக்கொண்டு ஒப்புஉயர்வுஇல் பெண்மைதனைப் பழிப்போர் செத்தஇடம் புல்முளைக்கச் செப்பும்நாள் - எந்நாளோ? (16) இருவர் இணைந்துபெறும் இல்வாழ்க்கை அறிகுறியா ஒருவர் பெறுந்தாலி ஒழியுநாள் எந்நாளோ ? (34) எனக்குத் தமிழ்வராது என்று உரைக்கும் புன்தமிழர் இனித்த தமிழ்பேசி எழிலுறும்நாள் எந்நாளோ? (18) இன்னும் இந்தியா” அன்றுபுத்தன் தன்னை நல்கி அறம்வளர்த்தது இந்தியா; இன்றுகாந்தி தன்னைப்பெற்றே எழில்வளர்ப்பது இருந்தியா (2) வானமீன் அளக்கவல்ல மாண்புமிக்க அறிஞரை ஏனைநாடு அளிக்குமுன்னர் ஈன்றதுனங்கள் இந்தியா () விலைமதிப்பில் பண்டைநாள் மேதினியோர் மெச்சிட எலிமயிரால் ஆடைநெய்தது ஈடில்எங்கள் இந்தியா (8) என்று பேசுகின்றது. இங்ங்னம் காந்தி திருப்புகழ், எந்நாட் கண்ணி, தீண்டாமை போன்ற பாடல்களிலும் கடுநடைப் பாடல்களைக் காணமுடிகின்றது. மேலும் கும்மியிலும்.” இவற்றைக் காண முடிகின்றது என்பதை, . 57. எந்நாட் கண்ணி - பக் 246 58. இந்தியா - பக் 254 59. கும்மி - பக். 239