பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ்க்கடல் ராயசொ காந்தி அறம்தரை எங்கும் வளர்த்திடக் கைகொட்டிக் கும்மி யடியுங் கடி! ஏந்திழை வெண்நகை மாதர்க ளே நல்ல எழில்தரு கப்பாடிக் கும்.மியடி ! (3) பழைய புராண மதம்பிடித் தோரே.இப் பாரினில் பெண்மை பழிப்பவர்கள்; பழைய புராணங்கள் பகரும் கருத்தையும் பகுத்தறி வோடுஅவர் பார்ப்ப தில்லை (25) தீண்டா மைஎனும் தீமை நிலத்தினில் சிறிதும் இடன்இன்றிச் சென்றுஒடி, மாண்டு மடிந்துமண் னாகித் தொலைந்திட மங்கைய ரே நனி கும்.மியடித்திட (43) என்ற பாடல்களில் கண்டு மகிழலாம். முத்திறம் பெற்ற மூதறிஞர்: இராய.சொ. ஒர் அற்புதமான மனிதர்; பல திறன்கள் படைத்த பேரறிஞர். இவர்தம் ஆளுமை அனைவரையும் வியப்படையச் செய்யும் பான்மையது. கல்விப்பெருமை, கவிதைப் பயிற்சி, சொற் பொழிவுத்திறன் ஆகிய மூன்றையும் அருளினான் இறைவன் இந்தச் சிவம்பெருக்கும் சீலருக்கு. இதனால் தமிழ் இலக்கியங்களில் காணும் பெருமை இவரை வந்தடைந்தது. இதனைக் காத்திக் கவிதை'யிலும் மிளிரக் கண்டு மகிழலாம். இலக்கிய துணுக்கங்கள் இவர்தம் பாடல்களில் பூவில் மணம்போல் பிறங்கக் காண முடிகின்றது. இவற்றை யெல்லாம் திறனாய்வுத் துறையாக எண்ணுவதில் தவறில்லை. சேக்கிழார் நூலிலுள்ள சீர்திருத்தக் கொள்கையெலாம் வாக்கினால் உரைத்துலகை வரைத்தருளிக் கண் வளராய்" |ளர (10) 60. தாலாட்டு - பக். 232