பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 151 பெரியபுராணத்தைச் சீர்திருத்த நூல் என்பது தமிழ்க் கடலாரின் கல்விப் பயிற்சியால் கண்ட முடிபு. கல்விதனிற் பெரிய கம்பனார் பெற்றெடுத்த செல்வ்த் தமிழ்ச்சிதை செம்பொனாள் நீத்ர்னோ?" (39) வான்மீகியில் வரும் சீதைக்கும் கம்பர் தமிழ் நாகரிகத்திற்கேற்ப உருவாக்கிய சீதைக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்ட தமிழ்க் கடலார் இங்ங்ணம் கூறியது. அவர்தம் திறனாய்வு நோக்கால் எனலாம். முன்பின் அறியா ஒருவனுக் கும்,உயர் மொம்பிலி, மூர்க்கன் முதலோக்கும் அன்பு:அறி யானுக்கும் வாழ்க்கைப் படு, புன்மை அகற்றிடு வோம்என்று கும்.மியடி ! (34) இட்டம் இலாத ஒருவ னுடன்கூடி இல்லறம் என்றுஒரு பேர்சொலியே கட்டி அழுவதில் செத்துத் தொலைவதைக் கைக்கொளல் மேல்எனக் கும்.மியடி 1 (37) என்ற பாடல்கள் சமுதாயத் திறனாய்வு நோக்கில் அமைந்தவை. சுருக்கமாகக் கூறினால், “காந்திக் கவிதை' என்ற படைப்பிலக்கியம் கவிதை வடிவில் தோன்றிய பெறலரும் வரலாற்று இலக்கியம்; வருங்காலத்தார்க்கு ஓராயிரம் உண்மைக் குறிப்புகளைக் காத்து வைத்திருக்கும் தமிழ்ப் பேழை; சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம் என எண்ணப்படும் பல்லியங்களும் உள்ளடங்கிய காந்தியத்தின் வழிகாட்டி, காந்திப் பொருளும் தமிழ்த் கடலார் புலமையும் இரண்டறக் கலந்து பிறந்தது" எனலாம். தமிழ் மக்களுக்குத் தமிழ்கடல் வழங்கிய ஒப்புயர் வற்ற தமிழமுதம். கடலில் பிறப்பதும் அமுதம்தானே. 61. மேலது - பக். 234 62. டாக்டர் வ.சு.ப மாணிக்கத்தின் பதிப்புரையும் மதிப்புரையும் பக். 22.