பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு நூல்கள் 153 உடையவர். தமிழன்னையின் பேரருளால் இராய. சொவும் அழகப்பரும் நீடிய நண்பர்களாயினர் தமிழின் ஆழ அகலங்களை வள்ளலுக்கு எடுத்துக் காட்டினார் தமிழ்க் கடல் கொடை புலமையை வியந்தது; புலமை கொடையை வியந்தது. இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்." இந்த முறையில் நட்பும் வளர்ந்தது. புலவரை வள்ளல் தமிழ்க் குருவாகவும் ஏற்றார் வள்ளல் தாம் கண்ட கல்லூரியில் ஒரு 'தமிழ் ஆராய்ச்சித் துறை'யை நிறுவவும் அதற்குத் தமிழ்க் கடலைத் தலைவராகக் காணவும் கருதினார். இந்த எண்ணத்தை 1957ல் வெளியிடவும் செய்தார். அப்போது நான் காரைக்குடியில் இருந்தமையால் இதனை நன்கு அறிவேன். அந்த ஆண்டில் வள்ளல் சிவப்பேறு அடைந் தமையால் எண்ணம் செயற்படவில்லை. அழகப்பர் அறத்தின் செயலர் க.வெ.சித.வெ. வேங்கடாசலம் செட்டியார் அழகப்பரின் இனிய பெரிய நண்பர் வாழ்க்கை முழுதும் அகலாது அணுகிப் பழகியவர். தம் இறுதிக் காலத்தில் "நண்பரீர், என் அறங்கள் தும் அடைக்கலம்" என்று ஒப்படைத்தார். வள்ளலின் தமிழ் ஆய்வுத் துறை காணும் எண்ணத்தை உருவாக்கும் காலம் 1964ல் முகிழ்த்தது. தமிழ்க் கடலை கல்லூரி வட்டத்தில் கொண்டு வந்து வைத்துக் கொண்டார். திருவருள் கூடியதால் தமிழ் ஆராய்ச்சித் துறையும் பிறந்தது. தமிழ்க் கடலும் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்தப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு ஆய்வு நூல்கள் உருவாயின. அவை ( கம்பனும் சிவனும், (2) வில்லியும் சிவனும் என்பவை. இக்காலத்தில் திருத்தலப் பயணத் திட்டமும் மேற்கொள்ளப்பெற்றது. அதன் விளைவாக 'திருத்தலப் பயணம்' என்ற நூலும் வெளி வந்தது. இதுவும் ஆய்வு நூல் பட்டியலில் சேரக் கூடியதே. 1. கம்பனும் சிவனும் முத்து விளையும் இடங்களில் கடலும் ஒன்று. தமிழ்க் கடல் தந்த முதல் முத்து 'கம்பனும் சிவனும் என்பது.