பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ்க்கடல் ராயசொ இராமகாதை காவியத்தில் சிவனைப்பற்றிய பாடல்கள் பல உண்டு என்று பலர் அறிவர். அவற்றைக் கவி தன் கூற்றாகவும் காவிய மாந்தர்களின் வாய்மொழியாகவும் வரும் பாடல்களையும் சிவனைக் குறித்த சொல்லாட்சி களையும் எடுத்துத் தொகுத்தளித்த தொகுப்பு நூல்தான் 'கம்பனும் சிவனும் என்ற ஆய்வு நூல். தொல்காப்பியர் நூல் முறையைத் தொகுத்தல் வகுத்தல் விரித்தல் என்று பாகுபடுத்திக் காட்டுவர். அம்முறையைத் தழுவியது இத்தொகுப்பு நூல். இராம காதையில் கம்பன் சிவனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள எல்லாப் பாடல்களையும் தொகையாக இந்நூலில் காணலாம். அப்பாடல்களைக் காவியமாந்தர்களின் மொழியாக வகைப்படுத்தியதையும் காணலாம். அதற்கு மேல் பொழிப்பு, விளக்கம் என்ற முறையில் விரிவையும் காணலாம். பொழிப்பு எழுதியதன் நோக்கம் யாவரும் பொருள் விளங்கிப் படிக்கத் துணை செய்ய வேண்டும் என்பது விளக்கம் எழுதியதன் நோக்கம் அறிஞர்க்கு விருந்தாக வேண்டும் என்பது. இந்த நூலில் நயஞ் செறிந்த இடங்களைப் படித்து அநுபவிக்க வேண்டும். சில இடங்களை மட்டிலும் ஈண்டுக் காட்டுவேன். கவிமொழியாகக் காட்டப் பெறும், நீறு அணிந்த கடவுள்' என்று ஆற்றுப்படலத்தில் வரும் பாடல் (பக்.7 மேகம் கடல் குடித்து மழை பொழிதலை துவல்வது. இந்தப் பாடலின் விளக்கம் தமிழ்க் கடல் இராய சொவின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றது. "மேகம் நீறு அணிந்து சிவபெருமானின் வெண்மேனி பெற்றுச் சென்று, கடலைக் குடித்து, மழை பொழியத் திரும்புங்கால் திருமாலின் "பச்சை மாமலை போல்" மேனி பெற்று மீண்டது. சிவபெருமானுக்குச் சொல்லப் பெற்ற நிறம் செம்மையாதலின் மேகத்தின் வெண்மையையுணர்த்த 1. திருமாலை -2