பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ்க்கடல் ராயசொ இதிலும் இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பாடல்களிலும் இராமனே இவ்வண்டங்கட்கெல்லாம் (Ք(ԼՔ முதற்கடவுளான காரணப் பொருள் என்று எடுத்துக் கூறுவான் சிவபெருமான். இதனைக் கேட்ட தேவர்கள் சிவபெருமானைத் தொழுகின்றனர். இத்துடன் நிற்க, வில்லிபாரதத்தில் 21 கதை மாந்தர்களில் சிவன் மொழியும் ஒன்றாக வருகின்றது. பார்த்தன் தவநிலையைப் பார்வதியிடம் சிவனே பாராட்டிப் பேசுவதாக அமைந்த பாரதப் பகுதியை உளம் பதிய உணர்ச்சி தோன்ற வரைந்துள்ளார். "தலப் பெருமை சொல்லுங்கால் வில்லி, தன்னை மறந்து சைவப் புலவர் எவரையும் விஞ்சி விடுகின்றார்" என்று கூறுவர் இராய சொ. தலங்களைச் சுற்றி வந்த சிவமணிப் புலவரின் நடுநிலையை இது காட்டு கின்றது. . சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், இராமகாதை, தேவாரம், திருவாசகம், முத்தொள்ளாயிரம் முதலிய பன்னூல் மேற்கோள்களை தமிழ்க்கடல் காட்டுவார். இம்மேற்கோள்கள் கற்கும் சுவையை மிகுவிக் கின்றன. சில மேற்கோள்கள் தெளிவு தரும் சான்றாக அமைகின்றன. எ-டு: பாடல் 54. செந்தமிழ் உரைத்த குறுமுனி என்ற தலைப்பில் வருவது கந்தனை அளித்த கன்னிஓர் பாகம் கலந்தமெய்க் கண்ணுதற்கு எதிராய், செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வமால் வரையிடைத் தோன்றி, இந்துவும் அரவும் உறவுசெய் முடிமேல் இருந்தமந் தாகினி அருவி வந்துழி புனலும், சகிதனம் கழ வ்ந்தது, மந்தமாருதமே." 10. அர்ச்சுனன் தவநிலை - 54