பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ்க்கடல் ராயசொ ஐந்துஆன சொல்லான் அளித்தான், மற்று அவனும் முன்நாள், ஐந்துஆன போகம் இவள்எய்திய ஆறுஅ றிந்தே. விளக்கம்: ஐந்து ஆனனம் - ஐந்து முகம், ஐந்து ஆன சொல் - ஐந்துமுறை. ஐந்தான சொல்லான் - ஐந்து எழுத்தான் சொல்லை உடையவன். ஐந்து எழுத்து - சிவாய நம; ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வோர் சொல் என்று சொல்லுவர் பெரியார். அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி (7.83:1) என்பார் சுந்தரமூர்த்திகள். ஐந்தான போகம் - ஐம்புலனும் நுகரும் இன்பம். இப்பாடலில் எல்லா அடிகளும் ஐந்தான என அமைந்திருப்பது ஒரு அணி." இங்கு சுந்தரமூர்த்தியின் மேற்கோள் இன்றியமை யாதது. இந்த இரண்டு பாடல்களிலும் காட்டப்பெறும் மேற்கோள்கள் தமிழ்க்கடலின் சைவநூற் பயிற்சிக்கும் எடுத்துக்காட்டுகள். இன்னொரு சிறப்பையும் இத்தொகுப்பு நூலில் காணலாம். இராமகாதையில் சிவனது கோலமும், பூக்களும் கருவிகளும் பலபடப் புனையப் பெற்றிருப்பினும் ஒரு சில கூறுகளைப் புலப்படுத்துவதில் வில்லிபாரதம் விஞ்சி நிற்கின்றது. பார்வதியை "அறம் வளர்க்கும் தெய்வப் பாவை’ என்றும் "ஆற்றினால் அறம் வளர்க்கும் அம்மை" என்றும், "பச்சைக் கொடி விடையானொடு பாகன் நிறை கொண்டாள்" என்றும் மிகவும் ஈடுபாட்டுடன் பாடுவர் வில்லி சிவன் அணியும் கொன்றைமாலைபற்றிய குறிப்பு இராம காதையில் ஓரிடத்துத்தான் வருகின்றது. வில்லியிலோ கொன்றை வாழமுடியோன் (6), கொன்றை நாள் மலரோன் (268), கொன்றையம் சடையான் (23) 11. திரெளபதி மாலையிட்ட சருக்கம் -31