பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு நூல்கள் 161 எனப் பல இடங்களில் அன்றலர்ந்த கொன்றை புகழப்படுகின்றது. கவி ஞானியர் கண்ணில் பருகும் சுவை அமுதானவர் பாதம் தலை வைத்தான் அர்ச்சுனன் பெண்ணையாற்றங்கரையிலுள்ள திருக் கோவிலுக்கு வந்ததைக் கூறும் பாடல் இது. விளக்கம்: பெண்ணையாற்றில் நீராடி உலகலந்த பெருமாள் கவிஞானியார் ஆகிய தேவார ஆசிரியர்கள் கண்ணினால் உண்னும் சுவைமிக்க அமுதம் போன்றவராகிய சிவன் ஆகியோர் திருவடிகளைத் தலைமீது கொண்டான் (பார்த்தன்). கவிஞானியர் - அப்பர் சம்பந்தர். இவர்களை வில்லிபுத்துராழ்வார் குறிப்பிடுவது காப்பிய உலகில் அவருக்கே உரிய தனிச்சிறப்பு என்பதை நாம் அறிகின்றோம். "மிக நகைத்தும், வெறுத்தும்" என வரும் வீமனது இருவகை உணர்ச்சிகளுக்கு தமிழ்க் கடல் நயங் கூறுவதும், வில்லியிலிருந்து அதற்கு ஒரு எடுத்துக்காட்டு நல்குவதும் மறக்க முடியாத இடங்கள். போர்முடித்தான்; அமர்பொருது, புலம்புறுசொல் பாஞ்சாலி பூந்தண் கூந்தல் கார்முடித்தான்; இளையோர்முன் கழறியவஞ் சினம்முடித்தான் கடவுள் கங்கை நீர்முடித்தான் இரவுஒழிந்த நீஅறிய, வசைஇன்றி, நிலைநின்று ஒங்கும் போர்முடித்தான்; இப்படியே யார்முடித்தார்? இவனுடனே பிறப்ப தேநான் ? இது வீமன் கண்ணனை நோக்கிப் பேசுவது. 12. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை - 16 13. கிருட்டிணன் தூது - 13 இ.இ.11