பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ்க்கடல் ராயசொ விளக்கம்: கண்ணனை நோக்கி வீமன் தருமன் செயலுக்கு வருந்தி விளம்புவது. தருமனின் அளவற்ற பொறுமைக்கு ஆற்றாது வீமன் கூறிய உரை என்க. அரவுயர்த்தோன் கொடுமையினும் முரசுயரத்தோய்! உனது அருளுக்கு அஞ்சினேனே (கிருஷ். தூது -11) என்று தருமனைப் பார்த்து முன்னும் சொன்னான் வீமன். அருள் அளவுக்கு மேற்பட்டுவிட்டால் தாங்க முடியாது தானே? மற்றபடி, அன்புறு தருமனுக்கு 咏 嫩 அநுசன் ஆயினேன் (அர்ச்சு - தவநிலை 121) என்று இயம்பித் தருமனை மதிக்கும் பார்த்தனைவிட வீமன் தருமனிடம் குறைந்த மதிப்புடையவன் என எண்ண வேண்டுவது இல்லை. சிவன் பலி ஏற்றதைத் திருமால் ஒழித்தான் என்ற கதையை வில்லி வேறு இடத்தும் கூறுவர். இஃது அற்புதமான விளக்கம்! சிவன் சில பாத்திரங்கள் வாயிலாக இழித்து உரைக்கப் பெறுகின்றான் என்பதை ஒப்பி பாரதத்தில் சில கதை மாந்தர்களால் திருமாலே பழிக்கப்பட்டது உண்டு எனக் காட்டி, "இது கதை மாந்தர்களின் தகுதியையும் சூழ்நிலையையும் பொறுத்தது' என்று காப்பிய இலக்கணத்தைச் சூத்திரம்போல் வடித்துத் தருகின்றார் தமிழ்க்கடல், இன்றைய மேனாட்டுத் திறனாய்வாளர் ஒப்பிய உண்மையும் இதுவே என்பதை நாம் அறிவோம். எ-டு. 'கற்கொண்டு கன்மழைமுன் காத்த கள்வன்' 'வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி' இவை இரண்டும் திருமாலை இழித்துக் கூறும் இடங்கள்.