பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு நூல்கள் 0 163 பாரதம் கண்ணன் தலைமைக்குரிய நூலாயினும்" வில்லி பெரிவாழ்வார் பெயர் கொண்ட வைணவப் புலவராயினும், யாவரும் போற்றத்தக்க சமயம் பொது நோக்கினர் என்ற கருத்தை தமிழ்க் கடல் இராய. சொ நிலைநாட்டினர். எனவே, வைணவர்கள் போற்றும் கம்ப நாட்டாழ்வாரும் வில்லிபுத்துாராழ்வாரும் தாம் வைணவக் கடவுளர்களாகிய இராமன், கிருட்டிணன் ஆகியோரின் காப்பியங்களில் தமது சமயப் பொறையைப் புலப்படுத்தும் பாங்கில் சிவபெருமானையும் சைவர்கள் போற்றும் பாங்கில் புகழ்கின்றனர் என்பதைத் தமிழ்க் கடல் தெளிவாகக் காட்டியுள்ளார் என்பதை அறிகின்றோம். மேலும் சிறந்த சிவம்பெருக்கும் சீலராகிய தமிழ்க் கடலும் சமயப் பொறையுடன் திகழ்ந்தவர் என்பதையும் உறுதியாக அறிய முடிகின்றது. 14. 'தூது போன்வான் ஏற்றம் சொல்வது பாரதம் - ரீவச. பூஷ. சூத்திரம் 6- (புருடோதம் நாயுடு பதிப்பு).