பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 உரைநடைப் படைப்புகள் அச்சுப் பொறிகள் தோன்றி அவற்றுடன் நம் நாடு போந்த ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்தான் தமிழில் உரைநடை அமைந்தது என்று சிலர் கருதுகின்றனர். இதனை முற்றிலும் ஒப்புக் கொள்வதற்கில்லை. அவர்கள் வருகைக்குப் பின்னர்தான் உரைநடை என்ற இலக்கியப் பிரிவு விரிவாக, கலையாக, வளர்ச்சி பெற்றது என்பதற்கு இருவேறு கருத்துகள் இல்லை. பண்டிருந்தே தமிழில் உரைநடைபற்றிய குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியம் என்ற பழைய இலக்கணத்தி லேயே உரைநடைபற்றிய குறிப்பினைக் காண்கின்றோம். உரைநடையும் செய்யுளும் கலந்த நூல்கள் அக்காலத்தில் முகிழ்த்திருந்தன என்ற குறிப்பு அதில் உள்ளது. தொன்மைதானே உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே.' என்பதே அக்குறிப்பு. இதனை 'உரையிடப் பெற்ற பாட்டுடைச் செய்யுள்' என்று அக்காலத்தில் வழங்கினர். பெருந் தேவனார் பாரதமும் தகடுர் யாத்திரையும் இதற்குச் சான்றுகளாகப் பழைய உரைநூல்களில் காட்டப் பெறுகின்றன. மேலும் அந்த இலக்கண அறிஞர், 1. தொல்-பொருள்-செய்யு- 231 இளம்)