பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் படைப்புகள் 165 அங்கதம் முதுசொல்லோடு அவ்வ்ேழ் நிலத்தும்’ என்று கூறுவர். இந்த நூற்பாவால் நூல் புணர்க்கும் முறை ஒரு பிரிவென்றும், அவற்றில் ஒன்று உரையாப்பு வகை என்றும் விதந்தோதுகின்றது. அந்த உரை நடையினை நான்கு வகையாக அவரே பிரித்துரைக்கின்றார். பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண் மரபில்லாப் பெய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யஜம்என்று உரைவகை நடையே நான்கென வொழிப இதனால் உரைநடையும் செய்யுளும் கலந்துள்ள நூல்களும், பாட்டிற்கு உரையாகக் கூறப்பெறும் நூல்களும், ஒரு பொருளின்றால் பொய்ப்படத் தொடர்ந்து சொல்லும் புதினங்களும், நகுதற்கு ஏதுவாகிய நாடகங்களும், சிறுகதைகளும் உரைநடை நூல்களாம் என்பது பெறப் படுகின்றது. சிலப்பதிகாரச் செய்யுட்கட்கு இடையில் சில இடங்களில் உரைநடை விரவி வருதலைக் காணலாம். இறையனார் அகப்பொருள் உரையில் சிறிது கடினமான நடையில் அமைந்த உரைநடைகாணப் பெறுகின்றது. இடைக்காலத்தில் வடமொழி கலந்த தமிழ் உரைநடை யினைச் சமண ஆசிரியர்கள் சிலர் மணிப் பிரவாளம் என்ற நடையில் எழுதினர் என்று ரீ புராணம், கதியசிந்தாமணி முதலிய நூல்களால் அறிய முடிகின்றது. வைணவ உரையாசிரியர்கள் நாலாயிரத்தில் திவ்வியப்பிரபந்தத்திற்கு மணிப்பிரவாள நடையில் உரை செய்தனர். பழைய முறையில்: மறைமலையடிகள், ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, கதிரேசச் 2. மேலது-பொருளி - 291 3. மேலது. செய்யு-166 இளம்)