பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ்க்கடல் ராயசொ செட்டியார், சோமசுந்தர பாரதியார் போன்றோர் பழஞ் சொற்களைக் கையாண்டு பழந்தமிழ் இலக்கிய நடையில் ஆய்வு நூல்கள் எழுதியுள்ளனர். பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் புறக்கணித்து இலக்கியத்தில் வழங்கும் சொற்களை மிகுதியாகக் கையாண்டு அவற்றைச் செறிவாக அமைத்து எதுகை மோனைகளை வைத்து எழுதுவதே பழைய உரைநடை. இந்த நடையில் திட்பமும் ஆழமும் இருப்பது உண்மையேயாயினும், இலக்கியம் கற்றுப் பழகியவர்கட்கு மட்டுமே. அந்த உரைநடை விளங்கும். எல்லோரும் அதைப் படித்துத உணர முடியாது. சிலருக்கு அஃது "எட்டாப் பழமாகவே" இருக்கும். எளிய உரைநடை காலம் மாறிவிட்டது. மக்கள் பலரும் விழித்தெழுந்துவிட்டனர். அறிவுச் செல்வம் ஒரு சிலருக்கே உரியது என்ற நிலைமை மாறிவிட்டது. அச்சுப் பொறிகள் பெருகி பலருக்கும் பயன்படுமாறு அமைய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆகவே, சிலருக்கு மட்டுமே பயன்படும் தமிழ்நடை இக்காலத்திற்கு எலாதது ஆகிவிட்டது. உரைநடை எளிய சொற்களால் தடை யில்லாமல் நேரே பொருள் தருவதாய் அமைய வேண்டும் என்ற நிலையை அறிஞர்கள் உடன்பட்டு விட்டனர். இந்தப் போக்கில், நோக்கில், எளிய நடையைக் கையாண்டு வழிகாட்டியவர்களில் முன்னோடிகளாக அமைந்தவர்கள் திரு. வி. க. உ. வே. சா. ஆகியவர்களைக் குறிப்பிடலாம். இவர்களை எண்ணற்றோர் பின்பற்றி எழுதி வந்தனர். நாள், வார, பிறை, திங்கள் இதழ்கள் இதற்குக் கை கொடுத்து உதவின. - இராய சொ: இந்தச் சூழ்நிலையில் முன் வந்து தமிழ் உரைநடையை எளிய முறையில் கையாண்ட பலருள் நம் தமிழ்க் கடல் ஒருவராக அமைகின்றார். அவர் படைத்த உரைநடை நூல்கள் மூன்று, அவை. இன்பம் எது? (1942), 2. குற்றால வளம் (1947), 3. காவேரி (1960). இவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு நோக்குவோம்.