பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் படைப்புகள் 187 1. இன்பம் எது? (1942 இந்நூலில் இன்பம் எது? முதல் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது இறுதியாக பதினாறு அழகிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. இத்தொகுப்பு நூல் வெளியிட்டது. சக்தி காரியாலயம். இதில் பல்வேறு பொருள்களில் தமிழ்க் கடலின் சிந்தனை யோட்டங்களைக் கண்டு மகிழலாம். ஒவ்வொரு கட்டுரையும் இராய சொ.வின் சிந்தனைக் கருத்துகள் அடங்கியவை. பதிப்பித்த முறையிலேயே இது பட்ட வர்த்தனமாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். ஈண்டுச் சிலவற்றைக் காட்டுவேன். முதல் கட்டுரையில் சில சிந்தனைத் துளிகள்: இன்பம் எது என்பதிலேயே பெரிய ஐயப்பாடு உள்ளது. "ஒருவர் தம்மைப் பிறர் புகழ்வதே இன்பம் எனக் கருதுகின்றார். ஒருவருக்கு அது நாராசமாகத் தோன்றுகின்றது" (பக்.2) "ஒருவருக்குப் படிப்பதில் இன்பம்; மற்றொருவருக்குப் படிப்பென்றால் எல்லையற்ற துன்பம்" (பக். "இன்பம் எப்பொருளிலும் இல்லை; உளத்தின் உணர்ச்சியே இன்பம் என்பது; இன்பம் என எண்ணித் தீமை செய்யலாகாது” (பக்.5 "அறம் வகுத்த பேரறிஞருள் வள்ளுவரை நிகர்த்தார் எவரும் இலர் என்பது பல அறிஞர்களின் கருத்து. அப்புலவர் பெருமானார் நான் சொல்வதே மறை; அதனை ஏற்றுக் கொள்க’ என்று கூறினாரல்லர். அவ்வாறு கூறியிருந்தால் அவ்ர உலகம் போற்றும் அறிவு பெற்றிருக்க முடியாது. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” (குறள்423), “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள்-35). என்னும் இரண்டு அருங்குறள்களை அருளினர் அப்பெருந்தகை (பக்.7 责 责 + 4. இக்காலத்தில் நான் துறையூரில் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியன் (வயது 26). அக்காலத்தில் சக்தி காரியாலியம் வெளியிட்ட சில நூல்கள் என் கவனத்திற்கு வந்தாலும், இது வரவில்லை.