பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ல் தமிழ்க்கடல் ராயசொ 'ஊழியம் (2) என்ற கட்டுரையில்: "இப்பரந்த பேருலகில் பிறந்த எவர்க்கும் உறுகடன் இவ்வூழியமேயாம். இதுபற்றியே என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் பெரியார் (பக்.9 பிறவிப் பேறு ஊழியம் புரிதலே என்பது அப்பர் முதலிய பெரியோர் கருத்து (பக்.13) 'பெருநெறி (3) என்ற கட்டுரையில், 'பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்பது வள்ளல் பெருமான் வாய்மொழி. சமய உண்மைகளை ஒர்ந்து உணர்ந்து உரைக்காது கருமமாற்றுவார் சமயங்கட்குத் தீங்கு புரிபவரே ஆவர். அவர்களால்தான் மூடநம்பிக்கை வளர் கின்றது” (பக்.20). 恕 'மதக்குறிகள்' () என்ற கட்டுரையில்; 'மதங்களின் உட்கருத்து இவ்வடையாளங்கள் அன்று. குறியின்றிக் கொள்கை இயங்கும் தகுதியுடையது (பக்.25 மதக்குறிகள் ஏதேனும் ஒருவகையில் இருந்தே தீரும். அக்குறிகளை ஆய்ந்து ஆய்ந்து காலத்திற்கேற்றவாறு கொள்ளுதல் வேண்டும் (பக்.28, - 'சாத்திரங்கள்' () என்ற கட்டுரையில், சாத்திரம் என்பது நூல் என்று பொருள்படும். இவ்வளவே. சாத்திரங்கள் என்றால் நூல்கள் என்பது பொருள் (பக்.33). 'சாத்திரங்கள் கூறுவன அனைத்தும் கொள்ளத்தக்கனவு மன்று. அவை கூறா அனைத்தும் தள்ளத்தக்கனவும் அன்று. சாத்திரங்கள் கூறுவனவற்றுள் தள்ளத்தக்கனவும் உண்டு. அவை கூறாதவற்றுள் கொள்ளத் தக்கனவும் உண்டு (பக்.37). 'புராணங்கள்' () என்ற கட்டுரையில்; நம் இந்திய நாட்டில் உலவும் புராணங்கள் இத்துணை என்று வரைப் படுத்தக் கூறா நிலையில் புராணங்கள் பெருகிக் கிடக்கின்றன. "புராணங்கள் மெய்யென நான் நம்பியிருந்த காலமும் உண்டு. அறியாமையால் மெய் எனக் கொண்ட ஒன்றைப் பொய்யென ஆராய்ச்சி அறிவால் கண்டால் அன்றே அதைத் திருத்திக் கொள்ளவேண்டும்" (பக்.40-4)