பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் படைப்புகள் 169 'புராணங்கள் கட்டுக் கதைகள் என்பதைப் பல வழிகளால் பகாமுடியும். வேறு வழிகளைக் காட்டிலும் புராணங்கள் மெய் என நம்பியிருப்பார்க்கு அப்புராணங்கள் வாயிலாகவே புகல்தல் நலம் எனக் கொண்டே இவ்வாறு கூறப்பட்டது" (பக்.44). 'ஆராய்ச்சி அறிவு () என்ற கட்டுரையில்; 'எதையும் ஆராய்ச்சி செய்து மெய்யறிதல் வேண்டும். ஆராய்ச்சியறிவு மக்கட் பிறப்பினர்க்கு மிகவும் இன்றியமையாதது? மக்கள் தாமே ஆறறி உயிரே...மாவும் மாக்களும் ஐயறிவினவே ...' என்பது தொல்காப்பியம், ஆறாவது அறிவுதான் பகுத்தறிவு என்பது" (பக்.46) பகுத்தறிவு என்பதுதான் ஆராய்ச்சியறிவு, பகுத்தறிவு என்றால் பிரித்தறியும் அறிவு என்பது பொருள், பகுத்தல் - பிரித்தறிதல் - ஒவ்வொரு பொருளையும் பிரித்துப் பிரித்து மெய்காண்டல். ஆராய்தலும் அதுவே' (பக்.48) 'இயற்கை இன்பம் (8 என்ற கட்டுரையில்; இயற்கை இன்பம் செல்வர்க்கும், வறிஞர்க்கும் மாறுபட்ட இன்பம் தருவதன்று. எத்துணைப் பெருஞ்செல்வராயினும் எவ்வளவு வறிஞராயினும் அவர் செல்வத்திற்கேற்ற அளவு இன்பப் பெருக்கமும் மற்றவர் நல்கூர்வுக்கேற்றபடியாக இன்பச் சுருக்கமும் இயற்கை இன்பத்தில் இல்லை (பக்.55). இயற்கை இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை; எத்துணை கோடி கோடி செலவிட்டு ஆக்கப்பெறும் செயற்கையில் தோன்றும் இன்பமும் இயற்கை இன்பத்திற்கு ஈடாகாது (பக்.58). 'அகமும் புறமும் (9) என்ற கட்டுரையில் உள்ளத்தால் ஒழுகும் ஒழுக்கம் உள்ளொழுக்கம்; அஃதாவது அக ஒழுக்கம். உடலால் ஒழுகும் ஒழுக்கம் வெளியொழுக்கம்; அதாவது புறவொழுக்கம் . இரண்டிலும் சிறந்தது அகவொழுக்கமே அகஒழுக்கத்தோடு கூடிய புற ஒழுக்கத்திற்கு மதிப்புண்டேயன்றி வெறும் புற ஒழுக்கத்தால் ஒரு பயனும் இல்லை. . அக ஒழுக்கம் இல்லாத புறஒழுக்கம் உயிரற்ற உடல் போலாகின்றது.