பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்: சைவ, வைணவ சமரச நோக்கம் கொண்டவர் இராய.சொ. தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்களுக்கும் இன்னும் சிவதேசச் செல்வர்கள் பாடியருளிய திருத்தலங்களுக்கும், ஆழ்வார்கள் பிரபந்தம் அருளிய திருத்தலங்களுக்கும் சென்று வணங்கும் கொள்கையுடையவர். தேவாரத் தலங்கள் 275இல் 269 திருத்தலங்களுக்கும், ஆழ்வார் டாசுரங்கள் பெற்ற 8ே திருப்பதிகளில் 99 தலங்களுக்கும் பலமுறை சென்றிருக்கிறார். இதன் விளைவாகத் திருத்தலப் பயணம் என்னும் அரிய நூலொன்றும் வெளியிட்டுள்ளார். வடநாட்டில் மும்பை, நாசிக், பஞ்சவடி, முதலிய திருக்கோயில்களுக்கும், கல்கத்தாவில் காளிகட்டம், இராம கிருஷ்ணாலயம், வைகுத்த தாதர்கோயில் முதலியவற்றிற்கும், அயோத்தி, காசி, திருக்கோகர்ணம், பூரீசைலம், அகோபிலம், மகாநந்தி, நேப்ாளம் முதலிய இடங்களுக்கும் சென்று ஆண்டவனை வழிபட்டு வந்து இருக்கிறார். துவாரகை செல்லுகையில், காந்திடியகள் பிறந்தருளிய புண்ணியத்தலமாகிய போர்பந்தர் சென்று, அம்மகான் அவதரித்த இல்லக்கோயிலையும் கண்டு, வணங்கும் பேறு பெற்றார். சிவாகம நூற்கு எல்லைகண்ட பெருந்தவத்தார் ஈசான சிவாச்சாரியார் அவர்களால் இராய.சொ. சிவபூசை எழுந்தருளிவிக்கப்பெற்றார். இதை இராய.சொ. அவர்கள் எண்ணியும், சொல்லியும் மகிழ்வார். நூலகக் கொடை வள்ளல் அழகப்பரின் தன்னல மற்ற ஈகையை, இராய.சொ. மிகவும் மதிப்பவர். எனவே அம்மதிப்பிற்கு ஒரு சான்றாக, தாம் வாழ்நாள் முழுதும் சேகரித்துத் தொகுத்த பெரிய நூல்நிலையத்தை அழகப்பா கலைக்கல்லூரிக்கு வழங்கினார். கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகரநூல்களும் இலக்கண, இலக்கிய, சமய, அரசியல் நூல்களும், பல்பொருள் பற்றிய அரிய உரைநடை நூல்களும் ஏராளமாக இந்நூலகத்தில் உள்ளன.