பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 0 தமிழ்க்கடல் ராயசொ (பக்.62), சைவ சமயம் என்றால் விபூதி என்றும், வைணவ சமயம் என்றால் திருமண் என்றும் மட்டும் எண்ணிக் கொண்டிருப்பவர் பலர் உள்ளனர் (பக்.57) 'உயிரும் உடலும் (10) என்ற கட்டுரையில்: உயிரைத் தாங்கி நிற்பது உடல், உயிரும் உடலும் வெளித்தோற்றத் திற்கு ஒன்றாகவே காணப்படும். உயிர் வேறு; உடல் வேறு. உடல்தான் கண்முன் தோன்றும். உயிரைக் கண்ணால் காணமுடியாது (பக்.71-72). உயிரெல்லாம் ஒன்றே. உயிரில் வேறுபாடே இல்லை. புல்லினுள் இருப்பதும் மாக்களுள் இருப்பதும் மக்களுள் இருப்பதும், ஆணுள் இருப்பதும் பெண்ணுள் இருப்பதும் எல்லாம் ஒரு தன்மையான உயிரே" (பக்.73). உலகம் ஒரு நாடக மேடை அம் மேடையில் உயிர்கள் ஆண் பெண் என்று வேடம் பூணுதலாகிய உடல் தாங்கி நடிக்கின்றன. நாடகக் காட்சி முடிந்தவுடன் உடலாகிய வேடத்தைக் களைந்து விட்டுச் சென்று விடுகின்றன (பக்.74) 'புண்ணியம் செய்யத்தக்கது. பாபம் செய்யத்தகாதது. பாபகாரியத்தை ஏன் செய்கிறோமென்று ஆராயும்பொழுது உடலின் பொருட்டாகவே என்பது கிடைக்கும். உடல் அழியும் தன்மை வாய்ந்தது; உயிர் அழிவில்லாதது; உடலின் பொருட்டுச் செய்யப் பெற்ற பாபத்தை இறுதியில் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகின்றது. (பக்.76). 'இறைக்கு வேல்ை என்ன ? (13) என்ற கட்டுரையில்: 'இறைவன் பெயர்கள் பல என்றாலும் பொருள் ஒன்றே. உலகத்துக்கெல்லாம் கடவுள் ஒன்றேயன்றி வேறன்று (பக்.9) “எவரெவர் எவ்வெவ்வினை ஆற்றுகின்றனரோ அவற்றை யெல்லாம் சீர்தூக்கி அவ்வவ்வினைக்கேற்ற பயனை நல்கிக் கொண்டிருப்பதே இறை வேலை (பக்.96. அகவை 44இல் தமிழ் கடல் இத்தகைய சிந்தனைகளில் ஆழ்ந்து நூல் வடிவம் தந்ததை எண்ணி மகிழ்கின்றோம்.