பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் படைப்புகள் 171 2. குற்றாள வளம் (1947) இந்த நூல் குற்றால வளம் என்ற கட்டுரை முதலாகக் கொண்டு பதினான்கு கட்டுரைகள் அடங்கியது. இவை இருபதாண்டுகட்கு முன் (1927) எழுதப் பெற்றவை: 'ஊழியன்' பத்திரிகையில வெளிவந்தவை. அனைத்தும் நீதிகளைப் பற்றியவை. அந்தக் காலத்தில் நல்ல தமிழுக்கு நவசக்தியும்' 'ஊழியனும் என்று சொல்லுவர். 'நவசக்தி'யில் திரு.வி.க.வின் எழுத்தோவியங்களும், ஊழியனில்’ இராய.சொ. அவர்களின் கட்டுரைகளும் அணி செய்தன. முதல் கட்டுரை சம்பந்தப் பெருமான் பாடிய பெருந்தண் சாரல் வளம் செய்யும் குற்றாலக் காட்சியை அழகிய சொல்லோவியமாக நம்முன் நிறுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து சிந்தனை அருள் உலக வாழ்வின் பல்வேறு துறைகளை வளஞ்செய்து செல்லுகின்றது. இந்நூலை வாழ்க்கை வளம் காட்டும் ஒளி விளக்கு என்று சொல்லலாம். நல்லன நாடல், கல்வியும் அறிவும், நிலையிலா வாழ்வு, அடக்கம், அழுக்காறாமை, அஞ்சாமை, ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் அமைந்த ஒரு கட்டுரை விளக்கு. திருக்குறளை அளவுகோலாகக் கொண்டு உலக வாழ்வை அளந்து காட்டும் ஒளி விளக்கு. காந்தியடிகளை நல்வாழ்விற்கு இலக்காகக் காட்டும் கலங்கரை விளக்கம் வள்ளுவரும் காந்தியடிகளும் இராய சொவின் குறிக்கோள் நாயகர்களாதலால் இருவர் கருத்துகளும் இதில் அடங்கியுள்ளன. 3. காவேரி (1960) இந்தத் தொகுப்பு நூலில் 'காவேரி என்ற கட்டுரையை முதல் கட்டுரையாகக் கொண்டு இளவேனிற்காலம், கம்ப 5. 1927 இல் நான் கோட்டாத்தூரில் திருச்சி மாவட்டம் தொடக்க நிலைப் பள்ளியில் (அகவை 1) படித்துக் கொண்டிருந்த காலம்.