பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தமிழ்க்கடல் ராயசொ ராமாயணத்தில் நகைச் சுவை, திருமங்கையாழ்வார், உயர்வு நவிற்சி அணி, குயில் பாட்டு என்ற ஆறு கட்டுரைகள் அடங்கியுள்ளன. 'காவேரி' என்ற கட்டுரை சிலப்பதிகாரத்தில் வரும் காவேரிபற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு புனையப் பெற ஒர் அழகான கட்டுரை. இத்துடன் பாரதியார், சேக்கிழார் பெருமான், வில்லிபுத்துராழ்வார், ஆகியோர் குறிப்புகளும் கட்டுரையை மேலும் வளமாக்குகின்றன. பட்டினப்பாலையிலுள்ள வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி என்ற அடிகளும், பொருநர் ஆற்றுப்படையிலுள்ள காவிரி பற்றிய வருணனையும் கட்டுரைக்குப் பொலிவு ஊட்டுகின்றன. சமய இலக்கியங்களில் ஆழங்காற்பட்ட தமிழ்கடல் தேவார திவ்வியப்பிரபந்தங்களில் காவிரியைப் பற்றிய குறிப்புகளையும் கட்டுரையில் சேர்க்கத் தவற வில்லை. . முத்தாய்ப்பாகத் தொண்டரடிப் பொடியாழ்வாரின் கங்கையிற் புனிதமாய் காவிரி என்ற பாசுர அடிக்கு விளக்கம் தரும் போக்கில் கட்டுரை முடிகின்றது. தமிழ் கடல் தரும் விளக்கம். "காசிமா நகரில் கங்கையாறு இறந்தார் உடல்களை ஏராளமாக வாரிக்கொண்டு வரும் நிலைகளை அடைந்து ஒரளவு புனிதத்தன்மையை இழந்தது போலல்லாமல் காவிரியாறு முழு பரிசுத்தமாக விளங்கு கின்றது என்ற கருத்து தொண்டரடிப் பொடியாழ்வாரின் 'திருமாலையில் வருவது” என்று காட்டுவார். வைணவ உரைகளில் கண்ட விளக்கக் குறிப்பையும் ஈண்டு தருவது மிகப் பொருத்தமாகும். கங்கை திருமாலின் உலகளந்த சேவடியினின்றும் தோன்றியதாதலால் பரிசுத்த மானது. அது சிவனது சடைமுடியில் தங்கியனால் அழுக்கு அடைந்துவிட்டது. காவிரிக்கு அத்தகைய குறைபாடு