பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைப் படைப்புகள் 173 ஒன்றும் நேரிடவில்லை. தவிர, கங்கையைத் தம் திருவடியினின்றும் உண்டாக்கிய பெருமானும் காவிரியின் நடுவில் பள்ளி கொள்ளும் பேறும் பெற்றதால் கங்கையை விட மேலும் சிறப்புடையதாகின்றது. தமிழ்நாட்டில், சிறப்பாக செட்டிநாட்டுப் பகுதியில், தான் 'காவேரி என்ற பெயரை மகளிர்க்குச் சூட்டும் வழக்கைக் காணமுடிகின்றது. 'கம்பராமாயணத்தில் நகைச்சுவை என்ற கட்டுரை சூர்ப்பனகை இராமன்மீது கொண்ட காதலால் பிராட்டியைத் துரக்க முயன்றதும், இலக்குவன் வாளால் மூக்கறுபட்டதும், அதனைத் தொடர்ந்து வரும் உரையாடல் களும் அமைந்தது. 'உயர்நவிற்சியணி என்ற கட்டுரை இந்த அணியை சேக்கிழார் பெருமான், இளங்கோ அடிகள், மணிவாசகப் பெருமான், விறலிவிடு துது ஆசிரியர், கவிச்சக்கரவர்த்தி கம்பன் இவர்தம் பாடல்களைக் கொண்டு விளக்குவதாக அமைகின்றது. விரிவஞ்சி அந்த விளக்கத்தில் புக முடிய வில்லை. 'குயில் பாட்டு' என்ற கட்டுரை பாரதியின் குயில் பாட்டை அற்புதமாக விளக்குவது. பாரதியின் கவித்துவத்தைக் காட்டும் ஒர் அழகிய சொல்லோவியம், பாட்டின் இறுதியில், வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறிரோ ? என்று கூறியதற்கேற்ப தமிழ்க்கடல் அதனை விளக்காமல் கட்டுரையை முடித்துக் கொள்கின்றார்." 6. என்னுடைய குயில்பாட்டு - ஒரு மதிப்பீடு என்ற நூலில் (1982) இதனை ஒரளவு விளக்கியுள்ளேன் (கழகத்தில் கிடைக்கும்)