பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருத்தலப் பயணம்’ மூர்த்திதலம் தீர்த்தம் - முறையால் தொடங்கினற்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராப்ரம்ே' என்பது திருத்தலப் பயணத்தைப் பற்றிய தாயுமான அடிகளின் குறிப்பு. . சார்வே தமக்குத் தாமோதரன் தாள்கள்' என்ற கொள்கையில் ஊற்றமுடையவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் எம்பெருமான் அநுபவத்தைப் பலவிதமாகப் பெறுவார்கள். அவர்களிடம் ஞானம் மீதுார்ந்து நிற்கும்பொழுது எம் பெருமானின் திருநாமங்களைச் சொல்வியநுபவிப்பர்; அவனுடைய திருக்குணங்களில் ஈடுபட்டு அதுபவிப்பவர்; அவனுடைய திவ்வியமங்கள் வடிவழகை வருணித்து அநுபவிப்பர்; அவன் உகந்த திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசி அநுபவிப்பர்; அவ்விடங்களில் ஆதரம் மிக்க பாகவதர்களின் பெருமையைப் பகர்ந்து அநுபவிப்பர். அவர்களிடம் பக்தி மீதுர்ந்து நிற்கும்பொழுது அது காதலாகப் பரிணமித்துத் தாமும் தாமான தன்மையை இயற்றியது. தமிழ்க்ட்ல் இராய.சொ. வெளியீடு க.வெ.சித.வெ.வேங்கடாசலம் செட்டியார் அழகப்பா அறநிலையச் செயலர், காரைக்குடி 630 003. (அவரது மணி விழா வெளியீடு). 1. தா.பா.பராயரக் கண்ணி. 2. திருவாய் 10.4.1