பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t76 தமிழ்க்கடல் ராயசொ கடலலைகள் தோற்கும் கடும்பிறவி வெள்ளத் துடநரகத் துள்நின் றுழலாது - அடைநெஞ்சே! ஆழ்வார்கள் பாட்டால் அலங்கரித்த லால்பதிகள் மூவாறு முப்பத்து மூன்று. அறனளிக்கும் ஆன்ற பொருளளிக்கும் வீட்டின் திறனளிக்கும் வேறென்ன செய்ய ? - பிறஉரைக்க நூலா யிரங்கற்பின் நோக்குங்கால் யாதுபயன் நாலா யிரத்தின் நலம். என்ற வெண்பாக்கள் திருத்தலங்களையும் அவற்றிற்குப் பயணம் செய்வோர் அடையும் பயன்களையும் தெரிவிக் கின்றன. இவை தவிர ஆழ்வார்கள் பாசுரங்களில் இடம் பெறாமல் மக்களால் வழிபடப் பெறும் தலங்களும் உள்ளன. இவை புராண அபிமானத் தலங்கள் என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றன. சைவத் திருத்தலங்கள்: இங்கு, திருத்தலங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதிகங்கள் பெற்றிருந்தால் தான் 'பாடல் பெற்ற தலங்களாகக் கருதப்பெறும். பதிகம் அல்லது பதிகங்கள் பெறாமல் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் தலங்கள் வைப்புத் தலங்கள்' என்ற பெயரால் வழங்கப்பெறும். தலங்கள் அமைந்து இருக்கும் இடங்கள்: முதலில் வைணவ திவ்விய தேசங்களைக் காண்போம். சோணாட்டுத் திருப்பதிகள் 40 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் #8 மலைநாட்டுத் திருப்பதிகள் i3 நடுநாட்டுத் திருப்பதிகள் 2 தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22 வடநாட்டுத் திருப்பதிகள் 12 திருநாட்டுத் திருப்பதி மொத்தம் 1 কিন্তু