பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் 6 177 வைணவ அபிமான புராண தலங்கள் 64 என்று கணக்கிடப் பெற்றுள்ளன. இனி பாடல் பெற்ற சிவத்தலங்களைக் தேவாரத் தலங்களைக் காண்போம். 1. சோழநாடு 191 2. ஈழகாடு 2 3. பாண்டிநாடு 14 4. மலைநாடு t 5. கொங்கு நாடு 7 6. நடுநாடு 22 7. தொண்டைநாடு 32 8. துளுவ நாடு 1 9. வடநாடு 5 மொத்தம் 275 வைப்புத் தலங்கள் 237 எனக் கணக்கிடப் பெற்றுள்ளன." பயணத்திட்டம்: இந்தத் திட்டத்தை வகுப்பதில் முக்கியமாகப் பங்கு பெற்றவர் தமிழ்க் கடல் இராய.சொ. அவர்கள். ஏற்கெனவே தேவாரத்திருத்தலங்கட்குச் சென்று சேவித்தவர். மற்றொருவர் முத்த. வெ. சொ. அவர்கள்; இவரும் திருத்தலப் பயணத்தில் நல்ல அநுபவம் பெற்றவர். ஊர்தியில் செல்வதுதான் வசதி என்ற முடிவு செய்யப் பெற்றது. அதற்காக சுமார் பத்துப் பேர்கள் செல்லவும், இரவில் சயனிக்கவும் கூடிய வகையில் சிறியதொரு இல்ல வசதியுடன் கட்டப்பெற்ற உல்லாசஊர்தி (Caravan) ஒன்று பெரிய செலவில் CVCTV அவர்கள் வாங்கினார்கள். அதில் நவீன கழிப்பறை வசதியும் பொருத்தப் பெற்றிருந்தது. சமய வேறுபாடின்றி தேவார-திவ்வியப்பிரபந்த தலங்கள் 5. வைணவச் செல்வம் - பகுதி 2. காண்க. (தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்) 6. பன்னிரு திருமுறை வரலாறு - முதற் பகுதி - பக் (694-72)