பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ்க்கடல் ராயசொ அனைத்தையும் சேவிக்க வேண்டும் என்பது திட்டம். எடுத்த காரியத்தைச் சிறப்புடன் செய்து முடிப்பதில் மிக்க திறனுடையவர் CVCTV அவர்கள்; அவருக்கு நிகர் அவரே. இந்தப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் இராய.சொ. .ேVCTV, முத்த வெ.சொ. C.VCTV யின் தமையனார் மகன் க.வெ.ராம. இராமசாமி செட்டியார், இராசிபுரம் புலவர் மு. இராமசாமி ஆகியோர் 28-1-65இல் தொடங்கப் பெற்ற பயணம் 19-3-66 (ஓராண்டு ஒரு திங்கள் இருபத்திரண்டு நாட்கள்) நிறைவு பெற்றது. பயணம் மணிவாசகப் பெருமானை இறைவன் ஆட்கொண்ட திருவாசகம் பெற்ற திருப்பெருந்துறையில் தொடங்கப் பெற்று நடுநாட்டில் திருப்பாதிரிப் புலியூருக்கு அடுத்த மாணிக்குழி என்ற தேவாரத்தலத்தில் நிறைவு செய்யப் பெற்றது. இந்தக் கூட்டுத் திருத்தலப் பயணத்தில் சேவித்த தேவாரத் திருத்தலங்கள் 275இல் 269, திவ்வியப் பிரபந்தத் தலங்கள் 108இல் 77 (திருப்பாற்கடல், பரமபதம். இப்பூவுலகில் இல்லாமையால் சேவிக்க முடியாதவை). இவை தவிர ஆங்காங்கே உள்ள பிற தலங்கள் 90 ஆக ஒராண்டு ஒரு திங்கள் 22நாட்களில் ஏனைய அலுவல்கட்கிடையில் சேவித்த தலங்கள் 456. இவற்றின் விவரம். சிவத்தலங்கள் தேவாரம் 269 வைப்பு 6 திருவாசகம் திவிசைப்பா 5 பிறசிவன் 31 ஆக সন্ত