பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 தமிழ்க்கடல் ராயசொ இருந்து உதவியவர் அழகப்பா பொறியியற் கல்லூரியில் பணிபுரியும் இரா. பதுமநாபன். இந்த நூலின் சிறப்பு: ஒவ்வொரு தலத்தின் அடியிலும் ( இறைவன்-இறைவி பெயர்கள், (2) பதிகங்கள் விவரம், (3) வழிப்பட்ட நாள்' (4 அந்தத் தலத்தின் இருப்பிடம் பற்றிய விவரம், () தலங்களை வணங்கும் "போற்றிப் பாடல்கள்." இங்ங்ணம் இந்த நூலை தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்த பாடல்களும், பின்வந்த பெரியார்களின் பாடல்களும் சேர்ந்து 813 அருட்டாக்கள் அணி செய்கின்றன. நூலைப் படிப்போர் இப்பாடல்களை மனப்பாடம் செய்தால் இறையருளுக்குப் பாத்திரங்க ளாவார்கள். - * இந்த நூல் CVCTV அவர்களின் மணிவிழா வெளியீடாக வருவது ஒரு தனிச் சிறப்பு. மனிதன் வாழ்வில் அறுபது ஆண்டுகள் ஒரு பகுதி. தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கையும் அறுபது, நாயன்மார்களுள் சுந்தரர், சடையர், இசைஞானியார் நீங்கலாக அடியார்களின் எண்ணிக்கையும் அறுபது. மனிதன் இல்லற வாழ்க்கையின் பயன் பெரும் பகுதியை அநுபவித்த நிலையில் மணி விழாவுக்குப் பின் வாழ்க்கையின் பிற்பகுதியைத் தொடங்கு கின்றான். உடல் பெற்ற பயனை ஒரளவு துய்த்தபின் அவன் உயிர்க்குறுதி பயக்கும் ஆன்ம வாழ்வில் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிட்டுகின்றது. CVCTV, அவர்கள் தம் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொண்டுள்ளது அவர் குலதெய்வமாக வணங்கி வரும் அரியக்குடிப் பெருமானின் திருவருட்பயனேயாகும் என்பது வெள்ளிடைமலை. பொருட்செல்வம் நிறைந்த பெருமகனார் அருட்செல்வம் 7. முதலில் குறிப்பிட்ட நாள் - இராய. சொ. தனியாக வழிபட்டது; இரண்டாவதாகக் குறிப்பிட்ட நாள். கூட்டாக வழிபட்டது.