பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை இன்றைய பேச்சு எட்டுப் பகுதிகளாக அமைந்தன. கி.பி.1898-இல் தோன்றி, தமிழ் கற்று, செட்டிநாட்டுத் தமிழ்வானில் ஒரு துருவ மீன் போல் திகழ்ந்த தமிழ் கூறு இந்திய மலேசியா நாடெங்கும் கால்நடையாடி சைவ-வைணவ திவ்விய தேசங்களைச் சேவித்து 1974-இல் சிவப்பேறு அடைந்த தமிழ்க்கடல் இராய.சொ.வைப் பற்றி அவர்தம் நூற்றாண்டு விழாவில் பேசி அப்பேச்சு அச்சு வடிவம் பெறுவதென்பது அடியேனுக்குக் கிடைத்தற்கரிய பெரும் பேறு. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய பத்தாண்டுக் காலத்திலும் (1950-60), அடுத்து விட்டுவிட்டுப் பழகிய ஆறாண்டுக் காலத்திலும் (1960-66 என்னுடைய வாமனன்போல் இருந்த குறைந்த தமிழறிவு இன்று நெடுமால்போல் வளர்வதற்கும் மெருகேறியதற்கும் தமிழககடலே முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்ற காரணங்களில் துணைக் காரணம் என்று கருதுகின்றேன். 'பெரியோர்கேண்மை என்ற முதல் பகுதியில் இராய. சொவுக்கும் அடியேனுக்கும் ஏற்பட்ட தொடர்பு, மகளிர் இல்லக் கம்பராமாயண ஆராய்ச்சி, இந்துமதாபிமான சங்கத்தில் வில்லிபாரதம் படிக்கப்பெற்ற செய்தி, இராய.சொ. சங்க நிர்வாக சபைக் கூட்டத்தை நடத்தியது தீர்மானங்களை பதிவு செய்யப்பெற்ற அற்புதமான முறை கல்லூரியில் ஆராய்ச்சித் துறை இயக்குநராக நியமனம் பெற்ற செய்தி போன்றவை சுருக்கமாகத் தெரிவிக்கப் பெற்றன. அன்ைத்திலும் தமிழ்க் கடலின் நேரிய போக்கு முதலியன சுட்டி விளக்கப் பெற்றன. செட்டிநாட்டைச்