பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை 183 சார்ந்த பண்டிதமணி வாழ்ந்த மகிபாலன் பட்டியில் வாழ்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர்" (புறம்-192) என்ற ஒரே பாட்டால் உலகப் புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனாரைப்போல், தமிழ்க்கடல் தம் காந்திக கவிதையில் இந்தியத் துணைக் கண்டப் புகழ் பெறுகின்றார் என்று கருதுவதால் இரு வேறு கருத்து இருக்க முடியாது. "பதிப்பித்த நூல்கள் என்ற இரண்டாம் பகுதியில் தமிழ்க் கடல் பதிப்பித்த வருணகுலாதித்தன் மடல் சோண சைவ மாலை அருணாசல புராணம்’, 'திருவிளையாடற் புராணம்- (மதுரைக் காண்டம்' என்ற நான்கு நூல்களின் பதிப்புச் சிறப்பைச் சுருக்கமாக எடுத்துக் காட்டினேன். அவர் அதில் பட்ட அல்லல்களையும் சுட்டி உரைத்தேன். இதில் முதல் நூலைப்பற்றிப் பேசுங்கால் மடல் ஏறுதல் பற்றிய விளக்கம் தந்தேன். வள்ளுவர் இதனைப் பற்றி இயம்பியுள்ள கருத்துகளையும், திருமங்கையாழ் வாரின் இருமடல்கள் பற்றிய செய்திகளையும் விளக்கினேன். என்னதான் நேர்ந்தாலும் ஆணைப்போல் பெண்மானத்தை விற்கத் துணியமாட்டாள் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தை விளக்கும் பாங்கில் "திருமங்கையாழ்வார் என்னும் பரமபக்தர் இம்முறையில் வழுவியுள்ளர்' என்ற தமிழ்க்கடல் கூறும் கருத்து தவறானது என்பதை விளக்கினேன். இதற்குத் துணையாக பன்னிருபாட்டியல் சூத்திரம் ஒன்றைக் கொண்டேன். "மகளிர் காதல் தம்மை மிகுதியும் கவற்றிய காலத்தும் மடலேறார் என்பது உண்மையே. ஆயினும் கடவுளர் தலைவராய் வருங்காலத்து மடலேறுவர்" என்பதால் பெண்களும் மடலேறுவதற்கு வகை செய்கின்றது. இதனால் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த இருமடல்களும் இக்கூறிய சூத்திரத்திற்கு இலக்கியங்களாக அமைகின்றன என்று நியாயம் காட்டி விளக்கினேன். தவிர, ஆழ்வார் வட நூல் இலக்கணத்தின் அடிப்படையில் மடல் ஏறுவதாகக் கூறுவதையும் சுட்டியுள்ளேன்.