பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ்க்கடல் ராயசொ இரண்டாவது நூலைக் குறித்துப் பேசும்போது சிவப் பிரகாச அடிகளைப் பற்றிப் பல குறிப்புகள் தந்தேன். அவர் நகைச்சுவையாகப் பாடின. "அரனவன் இடத்திலே" என்ற பாட்டிலுள்ள நகைச்சுவையை எடுத்துக் காட்டினேன். மூன்றாவது நூலைப்பற்றி விளக்கும் பாங்கில் அண்ணாமலை தலப்பெருமையை விளக்கினேன், நூலின் சுவையான பாடல்களை எடுத்துக் காட்டி விளக்கினேன்; உவமை நயத்தையும் அவ்வாறே விளக்கினேன். அண்ணாமலையார், உண்ணாமுலையார் துதிகள் நெஞ்சை நெகிழ்விக்கும் பாங்கைப் புலப்படுத்தினேன். நான்காவது நூலைப்பற்றிய விளக்கத்தில் மதுரைக் குரிய நான்கு புராணங்களைப் பற்றிய குறிப்புகள் தந்தேன் முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் மதுரை நகரில் சங்கத் தலைவராய் அமர்ந்து பெரும்புலவர்களோடு ஒன்றித் தமிழ் ஆய்ந்தார் என்ற பெருமை மதுரையைத் தவிர வேறு எந்த நகருக்கும் இல்லை என்பதை எடுத்துக் காட்டி உறுதிப்படுத்தினேன். ‘விளக்கநூல்கள்' என்ற மூன்றாம் பகுதியில் வள்ளுவர் தந்த இன்பம் என்பது அப்பெருமானின் காமத்துப்பால் பற்றிய விளக்கமாகும் என்று கூறும் போக்கில் அப்பகுதியில் உள்ள 25 அதிகாரங்களின் தலைப்புபற்றியும், அவற்றிலுள்ள ஒரு சில குறள்களின் விளக்கம்பற்றியும் தமிழ்க்கடல் கூறியிருப்பதைப்பற்றி எடுத்துக் காட்டினேன். இவ்விளக் கங்கள் சாதாரண மக்களும் அகப் பொருள் பற்றிய நுட்பமான கருத்துக்களைத் தெளிவாக அறிந்து கொள்வதற்குத் துணையாக அமைந்திருப்பதைச் சுட்டி யுரைத்தேன். - இரண்டாவதாக உள்ள திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி'யிலுள்ள பாடல்கள் கிட்டத்தட்ட திரு வாசகத்தையொட்டி உள்ளத்தையுருக்கும் பான்மை யுடனிருப்பதால் குட்டித் திருவாசகம் என்று வழங்கப்