பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை 9 185 பெறுகின்றது என்பதைச் சுட்டியுரைத்தேன். பல பாடல்கட்குத் தமிழ்க் கடல் இராய.சொ. காட்டியுள்ள உரைக் குறிப்புகளிலுள்ள ஒப்புமைப் பாடல்களை எடுத்துக் காட்டி அவை அந்தாதிப் பாடல்களுடன் எந்த அளவு ஒப்பாய் அமைகின்றன என்பதைத் தெளிவாக்கினேன். இந்த நூலிலுள்ள நவமணிகள் போன்ற பாடல்களையும் எடுத்துக் காட்டி அவற்றை உள்ளங்கலந்து ஒதினால் வீடு பேற்றிற்கு வழியாக அமையும் என்பதைத் தெளிவாக்கி னேன். 'தொகுப்பு நூல்கள்' என்ற நான்காம் பகுதியில் உள்ளவை 21 நூல்கள் எனக் காட்டினேன். இவை கடலில் கிடைக்கும் முத்துகள்போல் தமிழ்க்கடல் தந்த முத்துகள் எனக் கருதலாம் என்று தெரிவித்து இவை செட்டிநாட்டுப் பகுதிகளில் அணையா விளக்குகள்போல் தமிழ் உணர்வையும் பக்திஉணர்வையும் குன்றாமல் வைத்துள்ளன என்பதைச் சுட்டி உரைத்தேன். 'படைப்பு நூல்கள்' என்ற ஐந்தாம் பகுதியில், தமிழ்க்கடலின் படைப்புகள் யாவும் அடக்கமாக 'காந்தி கவிதை' என்ற ஒரே நூலில் திகழ்கின்றன என்பதைக் கூறி அவற்றின் எண்ணிக்கை 38 என்றும் காட்டினேன். இவை பெரும்பாலும் வேலூர் சிறையில் பிறந்தன என்பதைச் சுட்டும் போக்கில் இராய சொவுக்கு சிறைச்சாலையே தவச்சாலையாகி இவை பிறக்கக் காரணமாயிற்று என்பதைத் தெரிவித்தேன். தமிழ்க் கடலுக்குத் திருவள்ளுவரே, காந்தியடிகளாகப் பிறந்தார் என்ற நம்பிக்கை உண்டு என்பதைப் புலப்படுத்தினேன். தமிழ்க் கடலுக்குக் காந்தியடிகள் உடல் பொருள் ஆவி என்ற எல்லாமாக இருந்தனர் என்பதை இந்தப் படைப்புகளால் அறிய முடிகின்றது என்பதைத் தெளிவாக்கினேன். இப்படைப் புகள் தமிழ்க்கடலின் ஆளுமையை (Personality) நிலை நாட்டுபவையாக அமைகின்றன என்பதையும் சுட்டி