பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ்க்கடல் ராயசொ உரைத்தேன் காந்தியக் கவிதை' என்ற படைப்பிலக்கியம் பெறலரும் வரலாற்று இலக்கியமாக, காந்தியடிகளையும் இராய.சொ.அடிகளையும் ஒருங்கு காட்டும் காலக் கண்ணாடியாக நின்று நிலவும் என்பதைத் தெளிவாக்கி னேன். ஆய்வு நூல்கள்' என்ற ஆறாம் பகுதியில் அழகப்ப வள்ளல் கருதிய அழகப்பா கல்லூரி தமிழ் இலக்கியத் துறையின் இயக்குநராக இருந்த காலத்தில் துறை மூலமாக வெளியிடப் பெற்றவை () கம்பனும் சிவனும், (2) வில்லியும் சிவனும் என்பவை வெளிவந்தன என்றும் இவை இரண்டும் நூலாசிரியர்களையும், தமிழ்க்கடல் இராய. சொவையும் சிவபெருமானையும் நமக்குக் காட்டுகின்றன என்பதைத் தெரிவித்தேன். 'உரைநடைப் படைப்புகள் என்ற ஏழாம் பகுதியில் இராய சொவின், இன்பம் எது?, குற்றாலவளம், 'காவேரி" என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகளின் அடக்கம்பற்றிய செய்திகளை விவரமாக எடுத்துரைத்தேன். 'திருத்தலப் பயணம்' என்ற எட்டாம் பகுதியில் தமிழ்க் கடலும் திரு.சி.வி.சி.டி.வியும் வேறு சில அன்பர்களும் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு சைவ-வைணவ வேறுபாடின்றிச் சேவித்த 456 தலங்களைப்பற்றிய விவரங்கள், தலங்கள்மீதுள்ள பாடல்கள் முதலியவற்றை பதிவு செய்துள்ளதை எடுத்துக் கூறினேன். இந்த நூலும் அழகப்பா கல்லூரி ஆய்வுத் துறையின் வெளியீடாகவே நமக்குக் கிடைத்தது என்பதையும் சுட்டியுரைத்தேன். இந்த பொழிவு நூலில் தமிழ்க் கடல் இராய.சொ. என்ற துருவ மீன் செட்டிநாட்டுத் தமிழ்வானில் தோன்றியும் 76 ஆண்டுகள் வாழ்ந்தும், ஊனுடம்பு மறைந்தாலும் புகழுடம்பை நமக்கு-ஏன்? தமிழ் கூறு நல்லுலகிற்கு-விட்டுச்