பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதாபிமான சங்க வரலாறு சங்கப் பிறப்பு: இந்துமதாபிமான சங்கம் 10-9-1917இல் தோன்றியது. காரைக்குடியில் கோவிலூர் ஆண்டவர் எனப் போற்றப் பெறும் முத்துராமலிங்க ஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள், நூற்றாண்டுகளுக்கு முன் உண்டாக்கிய திருவாசக மடத்தில் முதலில் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. ‘s 委敦 அந்தநாள் இருந்த குறைபாடுகளை அகற்றி, திருத்தம் பல கண்டு சிறப்போங்கச் செய்தவர். சீர்திருத்தச் செம்மல் செ.முருகப்பனர் அவர்கள். சங்கம் 1967இல் பொன்விழாக் கண்டது. 1992இல் பவள விழாக் கண்டது. சங்கக் கொள்கை. தன வணிக நாட்டிற்கும். தமிழுலகுக்கும் தொண்டு செய்துவரும் இச் சங்கத்தில் பல ஊரைச் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றிருக்கின்றனர். இந்து மதத்தையும். தமிழையும் வளர்ப்பது சங்கத்தின் குறிக்கோள். சங்கம் மதத்தின் பெயரைக் கொண்டிருப்பினும் நாட்டிற்கும் மொழிக்கும் பெரிதும் உழைத் திருக்கின்றது. அடிமைப்பட்டுக் கிடந்த பாரத நாட்டை, உலகெலாம் வியக்க மீட்டுத் தந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரியார் காந்தியடிகளின் ஆணையைத் தலைமேற் கொண்டே இச் சங்கம் செயலாற்றியது. தனவணிக நாட்டில் விடுதலை வேள்விப் பெரு நெருப்பில் குதித்த அன்பர்கள் பலரும் இச் சங்கத்தின் தோன்றல்களே. தமிழ்ப்பணி: சங்கம் தமிழ் மொழிக்கு அரும்பணி செய்து வருகிறது. இச்சங்கத்தில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்களே இல்லை எனலாம். தமிழ் முனிவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் சங்கத்தின் விழாக்கள் பலவற்றிலும் தலைமையேற்றுச் சிறப்பித்ததோடன்றி, இன்று பொலிவுடன் திகழும் அழகிய சங்கக் கட்டிடத்திற்கும் கால்கோள் செய்திருக்கிறார். மூதறிஞர் இராஜாஜி 1952இல் இக்கட்டிடத்தைத் திறந்து வைத்துச் சிறப்பித்துள்ளார். 1965இல், தமிழ்க் கடல். இராய சொ. அவர்கள், சங்கத்தில் மேல்மாடி ஒன்று. தம் துணைவியார் நினைவாக எழுப்பித் தந்தார். சங்கத்திற்கு வந்த சான்றோர். தம் புகழ் நிறுவிச் சென்ற சான்றோர்களான, வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. அய்யர், ஞானியார் சுவாமிகள், ஈசான சிவாச்சாரிய சுவாமிகள்,