பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச். டி) பட்டம் பெற்றவர். (அந்த ஆய்வு நூல் ஆங்லத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது பல எம்ஃபில், பிஎச். டி மாணவர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம் உளவியல் (5), இலக்கியம் (21), சமயம், தத்துவம் (3), வாழ்க்கை வரலாறு தன் - வரலாறு (1), திறனாய்பு (19), அறிவியல் (18), ஆராய்ச்சி (6) ஆக : 1. நூல்களின் ஆசிரியர் இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும் சமய நூல்களில் மூன்றும் திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசுப் பரிசுகளையும் அறிவியல் நூல்களில் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றன. இவர்தம் அறிவியல நூல்களைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன் என்ற விருதையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டி, பண்ணுருட்டி வைணவ மாநாடு பூரீசடகோபன் பொன்னடி, என்ற விருதையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டி தமிழக அரசு திரு.வி.க. விருதையும் (10000 வெண்பொற்காசுகள் - 1987), மதுரைகாமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் (1991) விருதையும், இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராசா. சர். முத்தையவேள் விருதையும் (1994 - 50000 வெண்பொற்காசுகள்) சென்னைக் கம்பன் கழகம் இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டி பேராசிரியர் இராதா கிருஷ்ணன் விருதையும் (1994 - 1000 வெண் பொற்காசுகள்) சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் இராமாநுசர் விருது (1996 - 25,000 வெண்பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தன. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச்சிறப்புகளாகும்.