பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபுலானந்த அடிகள், வீர. கப்பையா சுவாமிகள், நாவலர் ந.மு. ல்ேகடசாமி நாட்டார். டி.கே சிதம்பரநாத முதலியார், சோமசுந்தர பாரதியர், பண்டிதமணி கதிரேசனார். ரா.பி. சேதுப் பிள்ளை, ஜகவீர பண்டினர். பூரணலிங்கம் பிள்ளை, தமிழவேள் உமா மகேசுவரம் பின்னை, உலக ஊழியனர் சரவண முதலியார், முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், தமிழ்க் கடல் இரய செ ஆகியோர் உட்பட பலரும் சங்கத்தின் விழாக்களில் பங்கு பெற்றுள்ளனர். பாரதியார் மகன் கவி சுப்பிரமணிய பாரதியார் 1919ஆம் ஆண்டில் சங்கத்துக்கு எழுந்தருளி, சில நாள் தங்கி, பாராட்டி அழு அணி பாடல்களைப் பாடியருளினார். தமிழகத்தில் பாரதியின் பாடல் பெத்த சங்கம் இது ஒன்றே. சங்க நூலகம் விவேகாநந்த புத்தக சாலை என்ற நூலகம் சங்கத்தை அணி செய்கின்றது. தமிழ்ப் பெரும் புலவர் மு. ரா. கத்தஅசிக் கவிராடிர் அவர்கள் மறைவிற்குப் பின் அவர்கள் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி வைத்திருந்த நூலகத்தைப் பெற்று அதையே ஆதியாக வைத்து நாளடைவில் சேர்க்கப் பெற்ற பல ஆல்களைக் கொண்டு இந்நூலகம் சிறந்து விளங்குகிறது. மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் பதிப்புச் செம்மல், க. மெய்யப்பனார் ரூபாய் மூடியிைலும் மதிப்புள்ள நூல்களைக் கொடையாக வழங்கியுள்ளார்கள். படிப்பகம். தமிழ், ஆங்கில நாளிதழ்கள். வார இதழ்கள், திங்கள் இதழ்கள், வாரமிரு முறை இதழ்கள், சமய வெளியீடுகள் படிப்பகத்திற்கு வருகின்றன. தொடர் செற்பொழிவும் விழாக்களும்: ஆண்டுதோறும் நகரச் சிவாலயத்தின் ஆடிப் பூரத் திருவிழாவை யொட்டி, சங்கச் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு சனவரித் திங்களிலும் தமிழ்க் கடல் ராய. சொ. விழா, பாரதி விழா, சங்க ஆண்டு விழா ஆகியன நடைபெறும். சமுதாயப் பணி: மக்கள் நலன் கருதிச் சேவை மனப்பான்மையுடன், சமுதாயத்திலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து, இயன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேவை செய்து வருகின்றது.