பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அவைத் தலைவர் அவர்களே! சங்கச் சான்றோர்களே! செட்டிநாட்டுப் பெருங்குடி மக்களே! இன்து இனிய நாள் எல்லோருக்கும். நம்முடன் இருந்து 76 ஆண்டுகள் வாழ்ந்து, ஈடில்லாத தமிழ்த்தொண்டு புரிந்த தமிழ்க்கடல் இராய சொ. அவர்களின் நூற்றாண்டு விழா. அவர் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தோம் என்ற பெருமிதமும் பெருமையும் நாம் பெற்றோம் என்ற மனநிறைவும் அடைகின்றோம். இல்லையா? எங்கோ பிறந்து வளர்ந்து கல்வி கற்றுத் தமிழ்ப்பணி புரிவதற்கு அடியேன் செட்டிநாடு வருவேன் என்பதை எவர் கண்டார்? மல்லல் பேர்யாற்று நீர்வழிப்படுஉம் புனைபோல், முறை வழிப்படும் ஆருயிர் (புறம் - 192) என்று செட்டி நாட்டுச் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் திருவாக்கிற் கொப்ப 95 சூலை 5ஆம் நாள் காரைக்குடி வந்தேன். இதனால் அடியேலுக்குப் பெரும்புலவர் இராய.சொ. வின் தொடர்பு கிடைத்தது; தொடர்பு தட்டாக மாறியது; நட்பு நாளடைவில் தந்தை - மகன் அன்டாக வளர்ந்தோங்கியது. இப்பெருமகனாரின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் பேறுகிடைத்தது இறைவனது திருக்குறிப்பாகும். இந்தப் பேறு கிடைத்தமைக்கு இறைவனுக்கு வணக்கம். வாய்ப்டை நல்கிய சங்கச் சான்றோர்களுக்கு என் இதயம்கலந்த நன்றி. தமிழ்க் கடலைப் பற்றிப் பேசப் புகுவது இப்பூமண்டலத்தை முக்கால் பகுதி சூழ்ந்திருக்கும் நீர்க்கடலைப்பற்றிப் பேசுவதோடொக்கும். இரண்டும் இயலாத செயல்கள். எனினும் முயல்கின்றேன். இப் பெருமகனாரைப் போற்றிப் பேசும் பொழிவை, பெரியோர் கேண்மை, பதிப்பித்த துரல்கள், விளக்க நூல்கள், தொகுப்பு நூல்கள், படைப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், உரைநடைப் படைப்புகள், திருத்தலப் பயணம் என்று எட்டுப் பகுதிகளாக வைணவ மந்திரமாகிய எட்டெழுத்து மத்திரம் போல் - அமைத்துக் கொண்டு பேச முற்படுகிறேன். முன்னுரையையும் முடிப்புரையையும் சேர்த்துக் கொண்டால் உரைப்பதிகம் போல் அமையும் என்றும் கொள்ளலாம். தயாரித்த பேச்சு, பெருவடிவம் கொண்டுள்ளதால் தவளைப் பாய்த்து' என்று இலக்கண நூலார் குறிப்பிடும் முறையில் பேச நினைக்கிறேன். - 1. நன்னூல் - 19 குத்திர நிலையைப்பற்றிக் கூறியது.