பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் எலன் உயிர்க்கு உயிராய் எள்ளும் எண் ணெயும்போல் எங்கணும் இடையறா நின்றான், எவன்.அனைத்து உலகும் ஈன்றுகாத் தழிக்க இறைமைசால் மூவுருவு எடுத்தான், என்முதல் இடையூறு இன்றிஎஞ் ஞான்றும் ஈதிலள ஒறைமுடி இருப்பான், அவன்னனைப் புரக்கத் திருக்களா நீழல் அமர்ந்தருள் புரிந்தகா ரனனே' - அதிவீரராம பாண்டியனார் இத்ததுல் தமிழ்க்கடல் இராய சொ. எழுதிய எல்லா தன்னையும் பல தலைப்புகளில் ஆய்ந்து எடுத்துக் கூறிய கருத்துகள் அடங்கியது. அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசி கருத்துகள் இவை. தமிழ்க் கடலைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் காணக்கூடிய ஒளிவிளக்கு இறையருளாலும் தமிழ்க்கடலின் ஆசியாலும் சங்கச் சன்றோர் அடியேனுக்கு வழங்கிய வாய்ப்பாலும் இந்நூல் அடியேனின் பொழிவாக வெளிவருகின்றது. இன்று விழாவில் குழுகியிருக்கும் செட்டிநாட்டுப் பெருங்குடிமக்கள் விரிவாக அறிந்து கொள்வதற்கும் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாத ஏனையச் சான்றோர்கட்கும் இராய.சொ. வைப்பத்தி முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்நூல் துணையாக இருக்கும் என்பது அடியேனின் நம்பிக்கை இரா.சொ. நூல்களனைத்தையும் சங்க நூலகத்திலிருந்து எடுத்து உதவிய செயலர் திரு. நா. மெய்யப்பனாருக்கு என் இதயக் கலந்த நன்றி. இந்த வாய்ப்பை நல்கிய சங்கத் தலைவர் முதல் நிர்வாகசபை உறுப்பினர்வரை அனைவருக்கும் என் நன்றி கலத்த வணக்கங்கள். அடியேனை இச்சீரிய பணியில் ஈடுபடுத்திய அடியேனின் ஆகூழுக்கும் நன்றி. 1. திருக் பதிற். அந் 16. நம்மாழ்வார் பாசுரத்தின் திருவாய் 1-11 கருத்தைத் தழுவியது.