பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ہ سبوس عمانسي | 1 | பெரியோர் கேண்மை இப்பூவுலகில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பெரியோர்களது தொடர்பு மிகவும் இன்றியமையாதது என்பது நம் அதுபவத்தில் காணும் பேருண்மை. அவர்களிடம் பெறும் உதவி சிறியதாக இருக்கலாம்: ஆனால் அவர்தம் ஆசி என்றுமே இருந்து கொண்டிருக்கும். இஃது ஒருபுறம் இருக்க, சிற்றினம் சேராது தவிர்க்கப் பெறுவது நாம் அடையும் பெரிய வாய்ப்பாகவும் அமையும். இதனை நீள நினைந்த வள்ளுவர் பெருமான், பெரியாரைத் துணைக் கோடல் என்ற ஒர் இயலே தமது நூலில் வகுத்துக் கொண்டு பத்துக் குறள்களில் பல்வேறு நோக்கில் பல பட விரித்து ஒதுகின்றார். மூன்று வயதில் தந்தையை இழந்த அடியேனது வாழ்வில் தான் இன்றுவரை பெரியோரை நாடும் பண்பை என்னிடம் ஏற்படுத்தியுள்ளான் இறைவன். சிறுவயது முதல் இன்று வரை (வயது 83) நல்ல நண்பர்களையும் பெற வாய்ப்புகள் தந்துள்ளான். 1949-என்பதாக நினைவு. துறையூரில் (திருச்சி மாவட்டம் 24-33 அகவையிலேயே புதிதாகத் தொடங்கப் பெற்ற ஓர் உயர்நிலைப்பள்ளியில் முதல் தலைமையாசிரிய னாகப் பணியாற்றிய காலம், அறிவியலில் ஆழங்கால் பட்டிருந்த அடியேனைத் தமிழன்னை ஆட்கொண்டு ஆசி வழங்கிய காலம். தமிழ் நூல்களைப் பேரார்வத்துடன் கற்று அளவற்ற அறிவுப்பசியுடன் இருந்த காலம். திருச்சி