பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண் ை 25 உரையாடிக் கொண்டே காரைக்குடி வந்தோம். விழாவில் கலந்து கொண்டோம். இராமனை வசிட்டன் விசுவாமித்திரரிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டேன், அது மட்டுமா? பெய்யு மானியில் பெருகு வெள்ளம்போல் மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் ஐய! நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து எய்து காலம் இன்று; எதிர்ந்ததாம்.' என்ற வசிட்டன் வாக்கும் இன்றளவும் நினைவில் இருந்து கொண்டுள்ளது. காரைக்குடிக் கம்பன் திருநாள் பயணம் கம்பன் அடிப்பொடி, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், சொ. முருகப்பா, தமிழ்க்கடல் இராய.சொ. ஆகிய பெரியார்களுடன் சேர்த்து வைத்தது. இதுவே அடுத்த ஆண்டு ஜூலை 5, 1950 புதிதாகத் தொடங்கப் பெற்ற அழகப்பா ஆசிரியர்க் கல்லூரியில் பணியேற்கவும் வாய்ப்பாக அமைந்தது. "மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொழு திரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முற்ைவழிப் படுஉம் என்பது" என்ற கணியன் பூங்குன்றனார் திருவாய் மொழியினை நினைந்து இன்றளவும் அசை போட்டுக் கொண்டுள்ளேன். எனது நல்லூழை நினைந்து போற்றுகின்றேன். 1950 ஜூன் இல் காரைக்குடி வந்தேன். பிள்ளையார் வழிபாடுபோல் சா.க. அவர்கள் இல்லத்தில் 3 நாட்கள் தங்கினேன். பிறகு 20 நாட்களில் கல்லூரி உணவு விடுதிக்கு மாற்றிக் கொண்டேன். ஒரு வாரத்தில், முதலில் அமராவதி 1. கம்ப. பாலகா. கையடை - 15 2. புறம். 192