பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ்க்கடல் ராசொ இருப்பவர்கள் உணவு விடுதிப் பொருள்களை வாங்கி ருந்தளிப்பார்கள். செல்வச் செழிப்புள்ள நகரத்தார் உறுப்பினர் இல்லத்திலிருந்தே தயாராகியுள்ள பொருள் கணை மகிழ்வுந்தில் சமையல்காரப்பையன் கொண்டு வருவான். அன்று விருந்து பலமாக இருக்கும். தினைவு - 2: தமிழ்க்கடல் வாழ்வில் சொ.முரு. மகனின் இல்லத்தில் இரண்டாண்டுகள் (சனி, ஞாயிறு நாட்களில் நடைபெற்ற கம்பராமாயண ஆராய்ச்சி மிக முக்கியமானது. இது சொ.முரு. அவர்களது திட்டம். அக்பராமாயணத்தில் நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடல் வேண்டும் என்பது சொ. முரு. அவர்களது கால்லையற்ற ஆர்வம். இதில் கலந்து கொண்டவர்கள் அடியேன். அழகப்பா கல்லூரி, க. தேசிகன், முனிசிபல் மேல்திலைப்பள்ளி, தமிழாசிரியர் பூ அமிர்தலிங்கன் இராய.சொதான் கூட்டத்தின் தலைவர். க. தேசிகன் இசையேற்றிப் பாடல்களை அற்புதமாகப் படி:ார். கூடியிருப்போரில் கவிதையின் குறை திதைகனைக் கூறுவார்கள். சொ. முரு, துணுக்கமாகப் பேசுவார். செருகுகவி'யைக் காரணங்களுடன் இனம் காட்டுவார்; நாடி பிடித்துக் காட்டும் மருத்துவர்போல். குழு இதனை ஆராயும். இராய.சொ. முடிவு சொன்னவுடன் பாடல் நீக்கப்படும். அல்லது வைத்துக் கொள்ளப்படும். இராமாயணம் முழுவதையும் இப்படி ஆராய்ந்தோம். க. அதுபவத்தை என் வாழ்க்கைப் பகுதிகளில் என்றுமே பெற்றதில்லை. செருகுகவிகளாகத் தாம் கருதுவனவற்றைச் சொ. முரு. அவர்கள் நீக்கிய முறையைப் பன்னி உரைக்கில் பாதமாம். ஒரு பாடலை எடுத்துக் காட்டி அஃது இராய.சொ. ஒப்புதலுடன் நீக்கப் பெற்றதைக் குறிப்பிடுவேன். 5. சனிக்கிழமை சிற்றுண்டிக்குப் பிறகு மகளிர் இல்லம் செல்வோம். ஞாயிறு மாலை 6 மணிக்குத் திரும்புவோம்.