பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தகிழ்க்கடல் ராசொ வேசியர்களும் தெருவிற்கு வந்து விடுகின்றார்கள் போலும், யாரோ பார்ப்பனரை வெறுக்கும் 'திராவிடக் கழகத்தைச் அப்போது திராவிடக் கழகம் இல்லை சேர்ந்த புலவர் ஒருவர் செருகின கவி இது" என்று நான் கூறினேன். தொடர்ந்து "விறலிவிடு துதில்" வரும் பார்ப்பனரைப் படைத்துக்காட்டும் அதிகாலையில் மடிசஞ்சியுடன் கடுக்கை அறையிலிருந்து வெளிவரும் பார்ப்பனருக்கும் தாய்க் கிழவிக்கும் ஒசையின்றி நேரிடும் கைகலப்பை திணைக்கவும் புலவரைவிட, இச்செருகு கவியைப் புனைந்த புலன் காதகர்" என்று கூறினபோது இராய.சொ.வும், சொமுருவும் விழுந்து விழுந்து சிரித்ததை இப்போது தினைவு கூர்கின்றேன். கவிக்கு வருவோம்). இது மட்டுமா? எதிர் கொள்வதிலுள்ள விருப்பமேலிட்டால் வாசக் கலவைச் சாத்துகளைப் பூசிக் கொள்ளாமலேயே வந்தவரும், வாசக் கலவைகளைப் பூசியவரோடு நெருக்கி உரசுதலால் பூசியவர்களின் வாசக் கலவைச் சாந்து தம்மீது இழுசிக் கான்ன, வாசக் கலவைச் சாந்துகளைப் பூசி வந்தவரினும் இருமடங்கு வாசக் கலவைச் சாந்தை உடையவர்க கானார்கள். இத்தப் பாடலும் கல்வியிற் பெரிய கம்பர் வாக்குதான் என்று யார் ஒப்புக் கொள்வார்கள்? ஒப்புக் கொண்டுதான் இத்தனைக் காலம் ஏட்டில் இடம் கொண்டிருந்தது. இப்போது இராய.சொ. ஒப்புதலுடன் கனைந்தெறியப்பட்டது: ே நினைவு-3: மகளின் இல்லத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நிறைவு பெற்றதும் இந்து மதாபிமான சங்கத்தில் 'வில்லிபாரதம் படிக்கலாம் என முடிவாயிற்று. இது சனிக்கிழமை தோறும் மாலை மூன்று மணிக்குத் தொடங்கி ஆறு மணிக்கு முடிவு பெறும். இரண்டாண்டுக்குமேல் வில்லி பாரதம் தொடர்ந்து நிறைவு பெற்றது. திருநாவுக்கரசு செட்டியார் பாடலை இசையுடன் படிக்க தமிழ்க் கடல் அவர்கள் விளக்கம் சொல்வார்கள். சொல்வதற்கரிய