பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண்டிை 31 இலக்கிய அநுபவங்கள் எதைச் சொல்வது? எதை விடுவது? எனக்கு இந்த அதுபவம் பெறற்கரிய பேறாக அமைந்தது. எல்லா நிகழ்ச்சிகளையும் விட ஒன்று: மட்டிலும் மிகப் பசுமையாக உள்ளது. கன்னனுக்குக் கண்ணன் தந்த காட்சிதான் அது நடைபெற்றது போர்க் களத்தில். நீலநெடுங் கிரியுமழை முகிலும் பவ்வ நெடுநீரும் காமாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்,வெங் கதைவாளும், சங்கு நேமி கோதண்டம் எனும்படையும் குழையும் காதும் மாலைநறுந் துழாய்மார்பும் திரண்ட தோளும் மணிக்க முத்தும் செவ்விதழும் வாரிசாதம் காலைமலர் எனமலர்ந்த முகமும், சோதிக் f கதிர்முடியும் இம்மையில்ே கண்ணுற்றேனே.” திருநாவுக்கரசு செட்டியார் இப்பாடலைப் படிக்கும் போதே குரல் தழுதழுத்து உருகி விடுகின்றார். கூடியிருந்தோர் திருமால் கஜேந்திராழ்வாலுக்குத் தந்த காட்சியையே கண்டு மனம் புளகாங்கிதம் அடைகின்றனர். தமிழ்க்கடலின் விளக்கம் இந்த அதுபவத்திற்கு முத்தாய்ப்பு வைத்து விடுகின்றது. மீண்டும் இந்தப் பாடலைத் திருநாவுக்கரசு செட்டியார் இசையேற்றிப் படிக்கும்போது கூடியிருந்தோரின் பக்தியதுபவம் கொடுமுடிக்குச் சென்று விடுகின்றது. நினைவு - 4: இந்துமதாபிமான சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையும் வில்லிபாரத வகுப்பு சனிக்கிழமையுமாக நடைபெறும்போது சங்கக் கட்டடம் கலகலத்துப் போகும். வெளியூர் நிர்வாக சபை உறுப்பினர்களும் வந்து சேர்வார்கள். இப்படி வருபவர்கள் திரு. கா. காடப்ப செட்டியார் (ஆத்தங்குடி, திரு. முத்த, வெ. சொக்கலிங்கம் செட்டியார் (காரைக்குடி 7. பதினேழாம் போர் - 247.