பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் கேண்டிை 33 ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அப்போது அவர் உடல் நிலையும் சற்றுக் குன்றியிருந்தது. இதயக்கோளாறு: என்பது மருத்துவச் சோதனையால் உறுதிப்பட்டது. மருந்து மாத்திரைகள் கவனமாக உட்கொள்ளச் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டோம். இவருடைய நெருங்கிய நண்பர் சிறைச்சாலைத் தோழர் பல் மருத்துவர் திரு வர்க்கீஸ் என்பார் "நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ விரும்பினால் என் சொல்லைக் கேட்க வேண்டும். மணிவிழா முடிகட்டும். உங்கள் பற்கள் முழுவதையும் பிடுங்கி எறிய வேண்டும். பிறகு பற்சீழ் நோய்க்கு (Pyrrhoea) ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். நான் அழகாகப் பல் கட்டித் தருவேன். அதைப் போட்டுக் கொண்டு நான் சொல்லும் உணவு வகைகளை மட்டிலும் தான் உட்கொள்ள வேண்டும். எண்ணெயாலான பொருள்களை அறவே விலக்க வேண்டும். இதய நோய்க்குத் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார். இராய.சொ.வும் அவர் அறவுரையைக் கடைப்பிடித்தார். அதனால் மேலும் பதினாறு ஆண்டுகள் (மார்க்கண்டேயர் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இக்காலத்தில் தமிழகத்தின் திசைகள்தோறும் சென்றும், திரைகடலைக் கடத்தும் தம் சொற்பொழிவுகளால் சைவத்தையும் தமிழையும் பரப்பி ஒல்காப் பெரும்புகழ் பெற்றார். இக்காலத்தில் இவர் பெற்ற விருதுகள் சினமணி 'சிவம் பெருக்கும் சீலர்' என்பன. ஒருநாள் சங்கத்தில் இராய.சொ. என்னிடம் "தமிழ்க்கடல் என்ற விருது தமிழகத்தில் எனக்குத்தான் முதன் முதலாக வழங்கப் பெறப் போகிறது என்று கருதுகின்றேன்” என்றார். நான் அப்போது 'அஃது பெரும் பாலும் உங்கட்கு இரண்டாவதாக இருக்கும்” என்றேன். ‘எப்படி?’ என்றார். சங்கத்தில் கட்டமைத்து வைக்கப் பெற்றிருந்த ஞானசாகரம் (பின்னர் 'அறிவுக்கடல் என்று மாற்றப்பெற்றது என்ற ஒரு தொகுதியிலிருந்து மறைமலை